நீளமான, உறுதியான முடிக்கு இந்த ஆயில்... கருவேப்பிலையை இப்படி அரைச்சு சேர்த்து ட்ரை பண்ணுங்க!

6 hours ago
ARTICLE AD BOX

நமது அண்றாட வாழ்க்கையில் உணவில் அதிகம் பயன்படுத்தும் இலை கருவேப்பிலை. உணவுக்கு மட்டும் அல்லாமல், இயற்கையாகவே கருவேப்பிலையில், அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது. குறிப்பாக முடி உதிர்வை தடுத்து, முடி அடர்த்தியாக வளவு கருவேப்பிலை உதவும் என்று சொல்வார்கள். அந்த வகையில் கருவேப்பலை வைத்து எண்ணெய் மற்றும் ஹேர் பேக் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் – 2 கப்

கருவேப்பிலை -  2 கப்

Advertisment
Advertisements

வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன்

கருவேப்பிலை – ஒரு கைப்பிடி

தயிர் – கால்கப்

செய்முறை:

முதலில், 2 கப் கருவேப்பிலையை எடுத்து நன்றாக மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பானில் 2 கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் அதில், அரைத்த கருவேப்பிலையை சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும்.

எண்ணெயில் வரும் நுரை அடங்கியவுடன், அடுப்பை ஆப் செய்துவிட்டு இந்த எண்ணெய் சூடு ஆறும்வரை பொறுத்திருந்து, அதன்பிறகு ஒரு நூல் துணையில் வடிக்கட்டி எடுத்தால், கருவேப்பிலை ஹேர் ஆயில் ரெடி.

அதேபோல் ஒரு மிக்ஸியில், வெந்தயத்தை எடுத்து அரைத்து, அதனுடன் கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும். அடுத்து இதில் கல் கப் தயிர் சேர்த்து நன்றாக அறைத்து எடுத்தால், ஹேர் பேக் ரெடி.

அரைத்து எடுக்கும்போது தண்ணீர் போல் இருக்கும் இந்த பேக்கை, சிறிது நேரம் வைத்திருந்தால், அதில் இருக்கும் வெந்தயம் ஊறி, பேக், சற்று கெட்டியாக மாறும். அதன்பிறகு இதனை பயன்படுத்தலாம்.

குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் இதனை தலையில் தேய்த்துக்கொண்டு, 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.  

Read Entire Article