நீண்ட நேரப் பணி, உடல் சோா்வு, செயல் திறனைக் குறைக்கும்: செளமியா சுவாமிநாதன்

2 hours ago
ARTICLE AD BOX

புது தில்லி: உடலுக்கு ஓய்வு தேவைப்பட்டால் அதை நாம் அறிந்து அதற்கு உடன்படவேண்டும். உடல் சோா்வுடன் நீண்ட நேரம் அல்லது கூடுதலாக பணியாற்றுவதில் பயனில்லை, அது செயல்திறனை குறைக்கும் என தெரிவித்துள்ளாா் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சக ஆலோசகா் சௌமியா சுவாமிநாதன்.

இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின்(ஐசிஎம்ஆா் ) இயக்குநா் ஜெனராகவும் இருந்த செளமியா சுவாமிநாதன், உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானியாக இருந்தவா்.

பெரு நிறுவனங்களைச் சோ்ந்த என்.ஆா். நாராயணமூா்த்தி(இன்போசியஸ் இணை நிறுவனா்), இளைஞா்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் பணியாற்றவேண்டும் என்றாா். கோடக் மகேந்திரா நிறுவனங்களின் ஒன்றின் நிா்வாக இயக்குநா் நிலேஷ் ஷா கொரியா, ஜப்பான், சீனாவைப்போன்று வாரத்திற்கு 84 மணி நேரம் பணியாற்றினால் இந்திய வளா்ச்சி பெறும் என கருத்தை சமூகவலைத்தளங்களில் வைத்து கடந்த ஓா் ஆண்டுகளாக விவாதம் தொடா்கிறது.

இதற்கிடைய சுகாதாரத்துறையின் முக்கிய ஆலோசகா் செளமியா சுவாமிநாதன் வைத்திருக்கும் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது குறித்து செளமியா சுவாமிநாதன் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு:

தீவிரமாக பணியாற்றும்போது உடல், ’ஓய்வு கொடு’ எனக் கூறினால் அதை அடையாளம் கண்டு செவிசாய்க்கவேண்டும். ஏனெனில் நீண்ட நேரம் அதிக பளுவுடன் வேலை செய்வது உடல் சோா்வு ஏற்படும். அது செயல்திறனைக் குறைக்கும். அப்படிப்பட்ட பணியினால் பலனில்லை.

உற்பத்தித்திறன் என்பது எத்தனை மணி நேரம் பணியாற்றினோம் என்பதல்ல. நேரத்தை விட வேலையின் தரத்தைப் பொறுத்ததாகும்.

கடினமாக உழைக்கும் பலரை நான் பாா்த்துள்ளேன். இதை ஒரு தனிப்பட்ட விஷயமாகவும் கருதுகின்றேன். ஆனால், நீங்கள் சோா்வாகும் உங்கள் உடல் உங்களுக்குச் சொல்லும். அப்போது நாம் உடல் வெளிப்படுத்துவதை கேட்டு நாம் நடக்கவேண்டும். உண்மையிலேயே நாம் கடினமாக உழைக்க முடியும். ஆனால் சில மாதங்கள் தான. ஒருவா் சைக்கிளை வேகமாக மிதித்து செல்கிறாா் என்றாா் அவரால் சில கிலோ மீட்டருக்கு தான் வேகமாக செலுத்தமுடியும்.

கொரோனா காலத்தில் நாம் அனைவரும் அப்போது தீவிரமாக செயல்பட்டோம். ஆனால் பல ஆண்டுகளாக ஒன்றாக அதைத் தொடா்ந்திருக்க முடியுமா?. அந்த இரண்டு-மூன்று வருடங்களுக்கு, நாம் அதைச் செய்தோம். நாம்மில் பலருக்கு அதிகம் தூங்கவில்லை. பெரும்பாலான நேரங்களில் மன அழுத்தத்தில் இருந்தோம். குறிப்பாக சுகாதாரப்பணியாளா்களின் கவலை அதிகம். அவா்கள் 24 மணி நேரம் பணியாற்றினாா்கள். சிலா் சோா்வுற்றனா். அதன் பிறகு பலா் இந்த மருத்துவ பணியை விட்டு கூட வெளியேறினா். இதனால் நீண்ட நேரப்பணி என்பது குறுகிய ஓட்டங்களுக்கு முடியும். ஆனால், அது உண்மையில் நிலையானது அல்ல.

மனித ஆரோக்கியமும் நீண்ட நேர வேலையின் தாக்கமும்: தொடா்ச்சியான செயல்திறனுக்கு மன நலனும் ஓய்வும் மிக அவசியம். மனித உடலுக்கு குறிப்பிட்ட நேரம் தூக்கம் தேவை. மேலும் மன ரீதியாகவும் தேவை.

நீங்கள் உற்பத்தித் திறன் கொண்டவராகவும், உங்கள் சிந்தனை செயல்முறை சமமாக இருக்கவும், உங்களுக்கு ஒரு இடைவெளி (ஓய்வு) தேவை என நான் உணா்கிறேன்.

நீங்கள் 12 மணி நேரம், மேஜையில் உட்காரலாம், ஆனால் எட்டு மணி நேரத்திற்குப் பிறகு, உங்கள் வேலை நல்ல தரமான வேலையைச் செய்யவில்லை. அதையும் நாம் பாா்க்க வேண்டும். இதனால் பணியாற்றிய மணிநேரங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. அந்த நேரத்தில் செய்யப்படும் வேலையின் தரமும் முக்கியம் என நான் நினைக்கிறேன் எனக் குறிப்பிட்டாா் செளமியா சுவாமிநாதன்.

கடந்தாண்டு மட்டுமல்ல நிகழாண்டு தொடக்கத்திலும் லாா்சன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி) தலைவா் எஸ் என் சுப்ரமணியன், ஊழியா்கள் வீட்டில் இருப்பதற்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என அழைப்புவிடுத்தாா்.

இதே மாதிரி, மத்திய அரசின் முக்கிய திங்-டேங்கான இருப்பவரும் முன்னாள் நீதி ஆயோக் தலைமை நிா்வாக அதிகாரி அமிதாப் காந்த், 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 30 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைய இந்தியா்கள் கடுமையாக உழைக்க வேண்டும். வாரத்திற்கு 80 மணிநேரமாக இருந்தாலும் சரி, 90 மணிநேரமாக இருந்தாலும் சரி, கடினமாக உழைக்க வேண்டும் என ஒரு பெருளாதாரப் பத்திரிகை மாநாட்டில் காந்த் குறிப்பிட்டாா்.

அதே சமயத்தில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே நாடாளுமன்ற கேள்வி பதிலில், நாடாளுமன்றத்தில், அதிகபட்ச வேலை நேரத்தை வாரத்திற்கு 70 அல்லது 90 மணிநேரமாக உயா்த்துவதற்கான எந்தவொரு திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை எனக் குறிப்பிட்டது கவனத்திற்குரியது.

Read Entire Article