“திருமணநாள் அன்றே தற்கொலை செய்து கொண்ட புதுமண தம்பதிகள்”… பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!

16 hours ago
ARTICLE AD BOX

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் மார்ச் 7ஆம் தேதி பிரதீப் மற்றும் ஷிவானி என்ற தம்பதியினர் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து அனைத்து சடங்குகளும் முடிவடைந்த பின் மணமகனின் வீட்டிற்கு மணமக்கள் திரும்பி உள்ளனர். மறுநாள் காலை மார்ச் 9ஆம் தேதி மணமக்கள் இருவரும் நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் கதவை தட்டி உள்ளனர் பலமுறை தட்டியும் எந்த பதிலும் இல்லாததால், பயத்தில் உறவினர்கள் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு மணமகன் ஆன பிரதீப் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். மணமகள் சிவானி படுக்கையில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அறையில் உள்ள ஆதாரங்களை தடவியில் நிபுணர்கள் மூலம் சேகரித்துள்ளனர்.

இதன்பின் மணமகன் பிரதிப்பின் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அறையின் கதவு இரவு உள்ளிருந்து பூட்டப்பட்டதால் வெளியில் உள்ள யாரும் உள்ளே செல்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. இருப்பினும் விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். திருமண வரவேற்புக்காக முழு குடும்பமும் தயாராகி கொண்டிருந்த நிலையில் திருமணம் ஆன அன்று இரவே மணமக்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் முழு குடும்பத்தையும் சோகத்தில் மூழ்கடித்து விட்டது.

இதுகுறித்து குடும்பத்தினர் கூறியதாவது, பிரதீப் மூத்த சகோதரர் தீபக் இருவருமே திருமண நிகழ்வின் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார். மணமகளின் தந்தையான மந்து ராம் தனது மகளின் கழுத்தில் காயம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Read Entire Article