ARTICLE AD BOX
வாழ்க்கையில் கவலைகள் வருவதும் சோகம் ஏற்படுவதும் இயல்பான ஒன்று சில நேரங்களில் நாம் எல்லோருமே சோகமாக உணர்வோம், தோல்வி இழப்பு ஏமாற்றம் போன்ற காரணங்களால் வருத்தம் அடைவது மனித இயல்பு ஆனால் சோகம் வேறு மன அழுத்தம் வேறு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் சோகம் என்பது ஒரு உணர்வு அது கொஞ்ச நேரம் இருந்து விட்டு போய்விடும் ஆனால் மன அழுத்தம் என்பது ஒரு நோய்….
சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் அது நம் வாழ்க்கையே புரட்டிப்போட்டு விடும் அதனால் தான் சோகத்தையும் மன அழுத்தத்தையும் பிரித்து அறிவது ரொம்ப முக்கியம் என்கிறார்கள் பெரியவர்கள். நீங்களும் சோகமாக இருக்கிறீர்களா இல்லை மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்…
முதலில் சோகம் என்பது ஒரு சாதாரண உணவு ஏதாவது கஷ்டம் வந்தா இல்லன்னா பிடிக்காத விஷயம் நடந்தால் எல்லோருக்கும் சோக வரும் பரிட்சையில் மார்க் குறைஞ்சா நண்பர் கூட சண்டை வந்தா இல்லன்னா செல்ல பிராணி இறந்து போனா கூட சோகம் வரலாம் இந்த சோகம் கொஞ்ச நாள் இருக்கும் சில நாட்களில் சரியாகிவிடும்..
சோகமா இருக்கும்போது சில வேலையை செய்ய முடியாது ஆனால் அன்றாட வாழ்க்கை பெரியதாக பாதிக்கப்படாது சந்தோஷமான விஷயங்கள் நடக்கும் போது சோகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும் நண்பர்களோடு பேசுவது சினிமா பார்ப்பது, பாட்டு கேட்பது போன்ற விஷயங்கள் சோகத்தில் இருந்து வெளியேற உதவும்..
ஆனால் மன அழுத்தம் என்பது இதுபோல் சாதாரணமானது கிடையாது இது ஒரு தீவிரமான மனநல பிரச்சனை. மன அழுத்தம் இருந்தால் காரணமே இல்லாமலோ அல்லது சின்ன காரணத்திற்காகவோ ரொம்ப நாளாக சோகமாகவே இருப்பார்கள் எதிலும் ஆர்வம் இருக்காது சந்தோஷமான விஷயங்களை கூட சந்தோஷம் தராது தூக்கம் வராது இல்லன்னா அதிகமா தூங்குவார்கள் சாப்பிட பிடிக்காது இல்லன்னா அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள் எப்பவும் சோர்வாகவே இருப்பார்கள் எந்த வேலையும் செய்ய பிடிக்காது நான் எதுக்கு லாய்க்கு இல்லாத ஆள் வாழ்க்கை வெறுத்துப் போச்சு எனும் போன்ற எதிர்மறை எண்ணங்கள் மனசுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் சில சமயங்கள் தற்கொலை பண்ணிக கூட தோணும். உங்களுக்கு இந்த மாதிரி அறிகுறிகள் இரண்டு வாரத்துக்கு மேல தொடர்ந்து இருந்தா அது மன அழுத்தமாக இருக்கலாம் சாதாரணமாக சோகம் சில நாட்களில் சரியாகிவிடும் ஆனால் மன அழுத்தம் தானாக சரி ஆவது கஷ்டம் மன அழுத்தத்திலிருந்து வெளிவர கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை தேவைப்படலாம் உங்களுக்கு மன அழுத்தம் இருப்பதாக சந்தேகம் இருந்தால் தயவு செய்து மனநல மருத்துவரை பார்க்க தயங்காதீர்கள் மன அழுத்தம் ஒரு நோய் அதை குணப்படுத்த முடியும் உங்களுக்கு நீங்களே உதவி செஞ்சுக்க முடியும்..
சோக முறையில் பண உணர்வு அது தற்காலிகமானது மன அழுத்தம் ஒரு நோய் அது நீண்ட காலம் இருக்கும் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உங்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வது மற்றும் சரியான நேரத்தில் உதவி தேடுவது ரொம்ப முக்கியம்…!!