ARTICLE AD BOX
நிலையாக இருக்கும் தங்கம் விலை.. 1 சவரன் ரூ.60,000-த்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது!
ஜனவரி 23-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,525-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,209-க்கும் விற்பனையாகிறது. இந்தப் பதிவில் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிவிப்பில், தங்கத்திற்கான இறக்குமதி வரி வெகுவாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தங்கம் விலை ரூ.51,000-த்திற்கும் கீழ் சென்றது. ஆனால் தற்போது படிப்படியாக அதிகரிக்க தொடங்கி நேற்றைய நிலவரப்படி 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.60,200-ஐ நெருங்கியது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 10,000 ரூபாய் அதிகரித்திருக்கிறது.
இதனால் நகைப்பிரியார்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கத்தின் விலை அதிகரிப்பது ஒரு சிலருக்கு நன்மையளிக்கும். அதே போல தங்கத்தின் விலை குறைவது ஒரு சிலருக்கு நன்மை அளிக்கும். அதாவது ஏற்கனவே தங்கத்தை ஒரு முதலீடாக கருதி வாங்கி வைத்தவர்களுக்கு அதன் மதிப்பு அதிகரிப்பது ஒரு நல்ல விஷயம். அதுவே புதிதாக நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பது சற்று கவலை அளிக்கலாம்.
இன்றைய (23/01/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,525-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 60,200-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.75,250-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,209-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 65,672-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 82,090-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,205-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 49,640-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 62,050-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,04,000-த்திற்கு விற்பனையாகிறது. கடந்த 7 நாட்களாக வெள்ளி விலை மாற்றமில்லாமல் ஒரே விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது.