நிலவை அடைந்த தனியார் நிறுவனம்.. வரலாறு படைத்த அமெரிக்காவின் ப்ளூ கோஸ்ட்.. சரித்திர சாதனை!

15 hours ago
ARTICLE AD BOX

நிலவை அடைந்த தனியார் நிறுவனம்.. வரலாறு படைத்த அமெரிக்காவின் ப்ளூ கோஸ்ட்.. சரித்திர சாதனை!

Washington
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நிலவு குறித்த ஆய்வுகள் கடந்த சில ஆண்டுகளாகவே மீண்டும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவின் தனியார் நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்போஸ் என்ற நிறுவனம் அனுப்பிய ப்ளூ கோஸ்ட் லேண்டர் இப்போது வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது. அது அடுத்து வரும் நாட்களில் நிலவிலேயே தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

விண்வெளி குறித்த ஆய்வுகள் என்பது கடந்த நூற்றாண்டு முதலே பெற்று நடந்து வருகிறது. கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே தான் விண்வெளி ஆய்வில் போட்டி இருந்தது.

Private US Blue Ghost Spaceship creates Historic Moon Landing successfully

நிலவு குறித்த ஆய்வுகள்

அதை நிலவுக்கு மனிதர்களை அனுப்பியதன் மூலம் அமெரிக்கா முடித்து வைத்தது. அதன் பிறகு நிலவு குறித்து ஆய்வுகள் பெரியளவில் நடைபெறாமல் இருந்தது. இதற்கிடையே சோவியத் ஒன்றியம் விழுந்து உலக அரசியலே மாறிவிட்டது. அதன் பிறகும் கூட நிலவைத் தவிர்த்து மற்ற விண்வெளி ஆய்வுகள் தொடர்ந்து நடந்தே வந்தன. இதற்கிடையே கடந்த சில காலமாக மீண்டும் நிலவு குறித்த ஆய்வுகள் தீவிரம் எடுத்துள்ளன. அமெரிக்காவும் கூட நாசாவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

ஆனால், கடந்த நூற்றாண்டில் நடந்த விண்வெளி ஆய்வுக்கும் இந்த நூற்றாண்டில் நடக்கும் விண்வெளி ஆய்வுக்கும் மேஜர் வித்தியாசம் இருக்கிறது. அதாவது கடந்த நூற்றாண்டில் அரசு மட்டுமே முழுக்க முழுக்க விண்வெளி ஆய்வுகளைச் செய்து வந்த நிலையில், இந்த முறை தனியார் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஸ்பேஸ்எக்ஸ், ப்ளூ ஆர்ஜின், போயிங் எனப் பல தனியார் நிறுவனங்கள் விண்வெளி ஆய்வில் தீவிரம் காட்டி வருகிறது.

தனியார் சாட்டிலைட்

இதற்கிடையே அமெரிக்க தனியார் நிறுவனம் அனுப்பிய சாட்டிலைட் முதல்முறையாக வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது. ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸ் என்ற இந்த தனியார் நிறுவனத்தின் ப்ளூ கோஸ்ட் லேண்டர் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. நிலவில் நேராகத் தரையிறங்கிய முதல் தனியார் நிறுவனத்தின் லேண்டர் ப்ளூ கோஸ்ட் ஆகும். கடந்த பிப்ரவரி மாதமே தனியார் லேண்டர் ஒன்று நிலவில் தரையிறங்கியிருந்தது. ஆனால், அது பக்கவாட்டிலேயே தரையிறங்கியிருந்தது. நேராகத் தரையிறங்கிய முதல் லேண்டர் ப்ளூ கோஸ்ட் ஆகும்.

எங்கே தரையிறங்கியது?

இந்த சாட்டிலைட்டில் மொத்தம் 10 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் இருக்கிறது. இது நிலவின் Mare Crisium என்ற இடத்தில் தரையிறங்கியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலவில் தரையிறங்கிய சிறிது நேரத்தில், அது மேற்பரப்பில் மேற்பரப்பில் இருந்து போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது.

45 நாட்கள் ஆய்வு

இந்த ப்ளூ கோஸ்ட் லேண்டர் கடந்த ஜனவரி 15ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. இது இப்போது சுமார் 45 நாட்கள் பயணித்து நிலவை அடைந்துள்ளது. இது ஒரு சந்திர நாள் (சந்திரயான் 3ஐ போலவே) - அதாவது பூமியில் 14 நாட்களுக்கு இணையான காலம் நிலவில் தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

தனியார் நிறுவனத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது ஒரு மகத்தான சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தியா, அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஜப்பான் மற்றும் சீனாவின் லேண்டர்கள் மட்டுமே விண்வெளியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A private US spaceship creates a historic moon landing (நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய அமெரிக்காவின் தனியார் நிறுவனத்தின் லேண்டர்): All things to know about Firefly Aerospace's Blue Ghost Mission 1 touched down.
Read Entire Article