நிறம் பற்றிய கேள்வி: ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

16 hours ago
ARTICLE AD BOX

சென்னை: தமிழ் திரையுலகில் ஹீரோயின்கள் செலக்‌ஷன் என்றாலே, அது கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா, மும்பை ஆகிய வட மாநில நடிகைகளுக்கே அதிக முக்கியத்துவம் தருவது வழக்கம். நன்கு தமிழ் பேச தெரிந்த மற்றும் சென்னையிலேயே வசிக்கும் சில நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமானவர். தெலுங்கு குடும்பத்தில் பிறந்த அவர், தற்போது பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்ற அவரிடம் ஒருவர், ஐஸ்வர்யா ராஜேஷின் நிறம் குறித்து கேள்வி கேட்டார்.

அதாவது, ‘உங்கள் ஒரிஜினல் கலரே இது தானா?’ என்று கேட்டிருக் கிறார். அவருக்கு பதிலடி கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், ‘நான் மாநிறம்தான். நமது ஊரின் கலரே இதுதான். நான் ரொம்ப வெள்ளையும் இல்லை, ரொம்ப கருப்பும் இல்லை. மாநிறத்தில் இருக்கும் பெண்கள்தான் அழகாகவும், களையாகவும் இருப்பார்கள்’ என்றார்.

Read Entire Article