ARTICLE AD BOX

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பானது ஒடிசாவில் நடந்தது. அங்கு தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து பிரியங்கா சோப்ரா பகிர்ந்து உள்ளார். சமீபத்தில் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு செல்லும் போது அங்கு நடந்த நெகிழ்ச்சியான ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதாவது நான் இதை அடிக்கடி செய்வதில்லை. ஆனால் இன்று எனக்கு நடந்த சம்பவத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண் கொய்யாப்பழம் விற்பதை கண்டேன். எனக்கு பழுக்காத கொய்யாப்பழங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் அவரை நிறுத்தி எனக்கு கொஞ்சம் பழங்கள் வேண்டும் கிலோ எவ்வளவு என்று கேட்டேன்.
அதற்கு அவர் ஒரு கிலோ 150 என்று கூறினார் . ஒரு கிலோ கொய்யாப்பழங்கள் வேண்டும் என்று ஒரு 200 ரூபாய் கொடுத்து அதை வாங்கிக் கொண்டேன். அவர் 150 ரூபாய் எடுத்துக்கொண்டு மீதி 50 ரூபாய் என்னிடம் கொடுத்தார். உடனே நான் அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவருக்கு அது உதவட்டும் என்று தான் செய்தேன். ஆனால் அவர் மேலும் இரண்டு கொய்யாக்களை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றார் . அதாவது அவர் என்னுடைய உதவியை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக கொய்யாவை கொடுத்தார். இது என்னை மிகவும் உத்வேகம் அடைய செய்தது” என்று பேசி உள்ளார்.