ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணிக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசிய ஷஸ்வத் திவாரி என்பவர் நியூசிலாந்து அணியின் திட்டம் மற்றும் பலவீனம் பற்றி வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
இதே சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் சுற்றில் நியூசிலாந்து அணி இந்திய சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பெரிய அளவில் தடுமாறி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக அவர்கள் இந்திய சுழல் பந்து வீச்சாளர்களுக்கு வேறு ஏதாவது முறையில் தயாராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய அணியின் அஸ்திரம்
தற்போது இந்திய பிளேயிங் லெவனில் இடம்பெறக்கூடிய நான்கு சுழல் பந்துவீச்சாளர்களுமே முழுமையான பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருக்கின்ற சுழல் ஆல்ரவுண்டர்கள் கூட பவுலிங் ஆல்ரவுண்டர்கள்தான். எனவே ஆடுகளம் மெதுவாக இருக்கின்ற நிலையில் தரமான நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்த்து விளையாடுவது எந்த அணிக்குமே கடினமானதாக அமைகிறது.
இதன் காரணமாக லீக் சுற்றில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய போதும்கூட, மற்றவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. நிலைத்து நின்ற கேன் வில்லியம்சனும் ரன் அடிக்க வேண்டிய கட்டாயம் வந்த பொழுது தாக்கி விளையாட முடியவில்லை. குறிப்பாக மிடில் ஓவர்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் பெரிய அளவில் சிக்கனமாக பந்து வீசினார்கள்.
நியூசிலாந்து அணியின் பலவீனம்
இதுகுறித்து நியூசிலாந்து அணிக்கு பந்து வீசிய வலை பயிற்சி பந்துவீச்சாளர் ஷஸ்வத் திவாரி கூறும்பொழுது “நான் இன்று அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு பந்து வீசும் வாய்ப்பைப் பெற்றேன். இந்திய அணியில் சுழல் பந்தை வேகமாக வீசும் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக தயாராக என்னை 18 யார்டில் இருந்து வீசச் சொன்னார்கள். பிறகு நான் அதிலிருந்து வீசும் பொழுது அவர்களுக்கு வேகம் அதிகமாக இருந்ததால் 22 யார்டுக்கு என்னை மாறிக்கொள்ள சொன்னார்கள்”
இதையும் படிங்க : ரோகித் சர்மா பிரஸ் மீட்டுக்கு வராத காரணம் இதுதான்.. உங்களுக்கு அந்த செய்தி வரலாம் – கங்குலி கணிப்பு
“அவர்கள் தற்போது இடது கை சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தயாராகி வருகிறார்கள். அவர்கள் பெரிய அளவில் போராடுகிறார்கள் என்று நான் கூற மாட்டேன். ஆனால் இந்திய அணியில் இருக்கும் தரமான இடது கை சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நிச்சயம் அவர்கள் தடுமாறுவார்கள். இந்திய சுழல் பந்துவீச்சாளர்களை இவர்களால் சமாளிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை” என தெரிவித்திருக்கிறார்.
The post நியூசி அணியின் திட்டம் பலவீனம்.. ரகசியத்தை உடைத்த இந்திய நெட் பவுலர்.. செம டிவிஸ்ட் appeared first on SwagsportsTamil.