நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு

10 hours ago
ARTICLE AD BOX

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு தொடங்கவுள்ள நிலையில் நாளைய தினம் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்தால் கொண்டாட்டம் தான். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து வருகிற விடுமுறை என்றால் கேட்கவா வேண்டும். கொளுத்தும் வெயிலில் நண்பர்களோடு சேர்ந்து ஆட்டம் போட ஆரம்பித்து விடுவார்கள். இதோடு சேர்த்து அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை என்றால் உறவினர்கள் வீடு அல்லது சுற்றுலாவிற்கு புறப்பட்டு விடுவார்கள்.
 

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டின் இறுதி கட்டத்தில் மாணவர்கள் உள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கவுள்ளது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராகியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வை 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் எழுதவுள்ளனர். இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

இதன் படி தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து வகையான அரசு அலுவலகங்களுக்கும் மார்ச் 4ம் தேதி செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய  5 மாவட்டங்களுக்கு நாளைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து  அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அய்யா வைகுண்டரின் 190வது அவதார தினம்

அதே நேரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் நிலையில் முக்கிய அரசு தேர்வுகள் திட்டமிட்டபடியே நடைபெறும் என்றும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் விடுமுறையானது அய்யா வைகுண்டரின் 190வது அவதார தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி மார்ச் 4ம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழா

இதே போல விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழா மார்ச் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகளை ஈடு செய்திடும் வகையில் மார்ச் 15 தேதி சனிக்கிழமை முழு பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Read Entire Article