ARTICLE AD BOX
நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் இசைக் கச்சேரி!

ஐபிஎல் திருவிழா இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. நாளை நடக்கவுள்ள போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் நாளைய போட்டி தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தில் இசையமைப்பாளர் அனிருத்தின் இசைக் கச்சேரி நடக்கவுள்ளது. போட்டி நடக்கும் 13 மைதானங்களிலும் முதல் போட்டிகளின் போட்டிகளின் போது இது போல கலைநிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் மிகவும் வலுவான அணிகளாகவும், சமப் போட்டியாளர்களாகவும் பார்க்கப்படுகின்றன. இந்த போட்டி அதனால் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக உள்ளது.