நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு முத்தம் கொடுக்கலாமா?

4 hours ago
ARTICLE AD BOX

உங்கள் வீட்டு செல்லப் பிராணிகளுக்கு முத்தம் கொடுப்பதால் உங்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

Why You Should Never Kiss Your Pets  : பொதுவாக பலரும் நாய், பூனை, முயல், கிளி போன்றவற்றை தங்கள் வீட்டு செல்லப்பிராணிகளாக அதிகமாக நேசித்து வளர்ப்பார்கள். இப்படி வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு அவர்கள் முத்தமழை பொழிவதையும், அதிகமாக கொஞ்சுவதையும் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். இன்னும் ஒரு படி மேல் சொன்னால் சிலர் தங்களுடைய செல்லப்பிராணிகளை தங்களுடன் படுக்கையில் உறங்க வைப்பதில் கூட தயங்குவதில்லை. அந்த அளவிற்கு அவர்களும் அவர்களுடைய செல்லப்பிராணிக்கும் இடையே ஒரு நல்ல நெருக்கமான உறவு இருக்கும்.

மேலும் சிலர் செல்லப் பிராணிகளுடன் விளையாடுவதும், பேசுவதுமாக இருப்பார்கள். இன்னும் சிலரோ செல்லப்பிராணியின் அருகாமையில் உட்கார்ந்து தனிமையை போக்கிக் கொள்வார்கள். இதனால் அவர்களுக்கு தனிமை துளியளவும் கூட தெரியாது. காரணம் அந்த அளவிற்கு செல்ல பிராணிகளுடன் நெருக்கம் உள்ளன. இன்னும் சொல்லப் போனால் பலரது மன அழுத்தத்தின் வடிகால் அவர்களது செல்லப்பிராணிகள் தான். ஆனால் செல்லப் பிராணிகளுக்கு முத்தம் கொடுப்பது நல்லதா? அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

உண்மையில்,செல்ல பிராணிகள் மீது பல வகையான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் உள்ளன. இது குறித்து விலங்கு நிபுணர்கள் கூறுகையில், செல்லப்பிராணிகள் வாயில் ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. அவை மனிதர்களுக்கு பல உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

முத்தம் :

குழந்தைகளுக்கு முத்தம் கொடுக்கக் கூடாது என்று பலர் சொல்லியிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். காரணம் முத்தத்தால் பாக்டீரியா போன்ற தொற்று அவர்களுக்கு ஏற்படும் என்பதால் தான். அதாவது நம் குழந்தைகளை முத்தம் கொடுக்கும்போது நம் வாயில் இருக்கும் எச்சில் குழந்தையின் சருமத்தில் படும். இதனால் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதுபோலவே செல்லப்பிராணிகளை நாம் முத்தம் கொடுக்கும் போது பாக்டீரியாக்கள் நம்மை தாக்கும். நாமும் உடல்நலம் பாதிக்கப்படலாம். செல்லப்பிராணிகளை சுத்தமாக வைத்துக் கொள்வது நம்முடைய பொறுப்பு. ஒருவேளை செல்லப்பிராணிகளை சரியாக பராமரிக்காமல் விட்டால் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் அவற்றின் இருப்பிடமாகவே மாறிவிடும்.

பொதுவாக செல்லப்பிராணிகள் கண்ட இடங்களில் உருளும், மண்ணில் உருளும், எச்சில் நக்கும் போன்ற விஷயங்களை செய்வதால் அவற்றால் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் பரவும் இத்தக சூழலில் செல்ல பிராணிகளை நாம் அடிக்கடி முத்தம் கொடுக்கும் போது, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.

தொற்று நோய் பாதிப்பு

செல்லப்பிராணிகளுக்கு முத்தம் கொடுக்கும் போது பிளேக், ஈறு நோய் போன்ற ஆபத்தான நோய்கள் நம்மை தாக்கும். அதுமட்டுமில்லாமல் உங்களுடைய வாயிலும் பாக்டீரியாக்கள் வளர்ச்சி ஏற்படும். இதனால்தான் மருத்துவர்கள் செல்லப்பிராணிகளை முத்தம் கொடுக்கக் கூடாது என்று சொல்லுகிறார்கள்.

விலங்கு நிபுணர்களின் கூற்றுப்படி, பூனைகளுடன் தூங்குபவர்களுக்கு அரிப்பு போன்ற தோல் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் சிலருக்கு அரிப்பு மற்றும் ஒவ்வாமை வரலாம்.

இதையும் படிங்க:  Heat Strokes In Dogs : நாய்களை தாக்கும் 'ஹீட் ஸ்ட்ரோக்'... இப்படி கவனித்து கொள்ளுங்கள்!

- நீங்கள் வீட்டில் செல்ல பிராணிகளை வளர்க்கும் போது அவற்றிருப்பு முறையாக தடுப்பூசி போடுங்கள். இதனால் ஆபத்தான நோய்களிலிருந்து அவை பாதுகாக்கப்படும். 

- அதுபோல செல்ல பிராணிகளை அடிக்கடி குளிக்க வைக்க வேண்டும்.

இதையும் படிங்க:  செல்லப்பிராணிகள் உங்கள் கிரக தோஷங்களை நீக்கும் தெரியுமா? அதுவும் இந்த பிராணி செவ்வாய் தோஷத்தை நீக்குமாம்..!!

Read Entire Article