ARTICLE AD BOX
செய்தியாளர்: துரைசாமி
நாமக்கல் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள 18 அடி உயரத்திற்கு ஒற்றை கல்லால் ஆன புகழ்பெற்ற ஆஞ்சநேயர் ஆலயத்தில் பங்குனி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டது.
இதையடுத்து நல்லெணெண்ய், நெய், பஞ்சாமிர்தம், 1008 லிட்டர் பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் உள்ளிட்ட நறுமண பொருட்களைக் கொண்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது இதில், நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை வணங்கிச் சென்றனர்.