ARTICLE AD BOX
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இறுதியில் ஆட்டத்தை முடித்த கே எல் ராகுல் வெற்றிக்கு பின்னர் சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
ஆட்டத்தை முடித்த கேஎல் ராகுல்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர் கொள்ள முடியாமல், மெதுவான ஆட்டத்தை விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு, 251 ரன்கள் குவித்தது. இதில் நியூசிலாந்து அணியின் டேரி மிச்சல் அதிகபட்சமாக 63 ரன்கள் குவித்தார். அவருக்குப் பிறகு பிராஸ் வெல் அதிரடியாக விளையாடி 53 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு வெற்றிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு வெளியேறினார். 83 பந்துகளை எதிர் கொண்ட ரோகித் சர்மா 76 ரன்கள் குவித்து வெளியேற, அவருக்குப் பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக விளையாடி 48 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய கேஎல் ராகுல் 33 பந்துகளில் ஒரு போர், ஒரு சிக்ஸ் என 34 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேஎல் ராகுல் பேட்டி
இந்த நிலையில் வெற்றி குறித்து பேசும்போது ” இதை நான் நேரலையில் சொல்ல முடியுமா? என்று தெரியவில்லை. ஆனால் நான் மிகவும் தைரியமாக இருந்தேன். எல்லை மீற முடியும் என்று என்னால் எவ்வளவு நம்பிக்கையோடு இருக்க முடியுமோ அவ்வளவு நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அதைவிட நிதானத்தைக் காப்பது தான் மிகவும் முக்கியம். இந்த முறை அதை செய்ததில் மகிழ்ச்சி 5 ஆட்டங்களில் நான் மூன்று முறை இது போன்ற சூழ்நிலையில் தான் பேட்டிங் செய்ய களம் இறங்கினேன்.
இதையும் படிங்க:12 வருடத்திற்கு பின்.. சாம்பியன் ஆன இந்திய அணி.. கேப்டன் ரோஹித் அபாரம்.. நியூசி அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி
ஆனால் இதை வார்த்தைகளால் சொல்வது கடினம், இந்திய அணிக்கு தூய திறமை உள்ளது. வளர்ந்து வரும் நாம் அனைவரும் கிரிக்கெட் விளையாட வேண்டிய விதம், என்னவென்றால் தொழில் முறை கிரிக்கெட் வீரர்களாக மாறியதில் இருந்து அழுத்தத்தை எதிர் கொண்டு விளையாடி இருக்கிறோம். இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களை நன்றாக வளர்த்துள்ளது. மேலும் நாங்கள் சிறப்பாக மாற நமக்கு நாமே சவால் செய்து கொண்டு விளையாட வேண்டும்” என்று கே எல் ராகுல் பேசியிருக்கிறார்.
The post நான் இதை ஓபனா சொல்ல முடியுமானு தெரியல..5ல் 3 முறை எனக்கு இது நடந்தது – கேஎல் ராகுல் appeared first on SwagsportsTamil.