ARTICLE AD BOX
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி, எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் “தி பாரடைஸ்” படத்தில் இணைந்துள்ளார் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் !
தசரா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நேச்சுரல் ஸ்டார் நானி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (SLV சினிமாஸ்) தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி ஆகியோருடன் மீண்டும் “தி பாரடைஸ்” எனும் அதிரடி திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷீட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர் நானி இப்படத்தில் தனது தோற்றத்திற்காக ஜிம்மில் பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்தப் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. ஜெர்சி மற்றும் கேங்க்லீடர் வெற்றிகளுக்குப் பிறகு, நானி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். அவர்களின் கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் இசையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது, ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த சமூக வலைத்தள பதிவில் நானி கூறியுள்ளதாவது…: “நாங்கள் எங்கள் ஹாட்ரிக்கில் இணைந்துள்ளோம் இது அற்புதமான காவியமாக இருக்கும். #Paradise இப்போது N’Ani’Odela படம். அன்புள்ள @anirudhofficial உங்களை வரவேற்கிறோம்”
இதற்கு பதிலளித்துள்ள அனிருத், “இந்த திரைப்படம் ஸ்பெஷலான ஒன்று. என் அன்பான @NameisNani மற்றும் @odela_srikanth லெட்ஸ் கோ கிரேஸி எனக்குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீகாந்த் ஒடேலா இப்படத்திற்காக ஒரு சக்திவாய்ந்த மாறுபட்ட அழுத்தமிகு திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இப்படம் நானியை முற்றிலும் புதிய, வெகுஜன அவதாரத்தில் காட்டும். நடிகர் நானி மிகவும் தீவிரமான மற்றும் ஆற்றல்மிக்க பாத்திரத்தில் நடிக்கிறார்.
தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி இப்படத்தின் திரைக்கதையில் ஈர்க்கப்பட்டு, மிகப்பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படத்தை உருவாக்குகிறார். நடிகர் நானியின் திரை வாழ்க்கையில், மிக அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இப்படம் இருக்கும்.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
நடிகர் : நானி
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : ஸ்ரீகாந்த் ஒடேலா தயாரிப்பாளர்: சுதாகர் செருக்குரி
பேனர்: SLV சினிமாஸ்
இசை – அனிருத் ரவிச்சந்தர்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஃபர்ஸ்ட் ஷோ
The post நானி நடிக்கும் “தி பாரடைஸ்” படத்திற்கு இசையமைக்கிறார் ராக்ஸ்டார் அனிருத் !! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.