ARTICLE AD BOX
நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படுவதாகவும் முன்னுக்குப்பின் முரணான கருத்துகளைக் கூறி வருவதாகவும் தெரிவித்து முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.
நேற்று(பிப். 24) நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கு முன்னதாக, நாதக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகினார்.
இதையும் படிக்க: அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் சீமான், நாதகவை வீழ்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு இன்று சீமான் செல்லவுள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விலகியுள்ளது அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.