நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்! ராகுல் சூளுரை

9 hours ago
ARTICLE AD BOX

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என்றும் அதனை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றினர்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 29 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அதிரடியாக உயர்த்தி மசோதாவை ஒருமதனாக நிறைவேற்றியுள்ளது தெலங்கானா அரசு.

இதையும் படிக்க : தெலங்கானா: பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்!

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:

”தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் உண்மையான எண்ணிக்கை கண்டறியப்பட்டதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் அவர்களுக்கு சம பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கில், இடஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக உயர்த்தி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமூக நீதியை நோக்கிய புரட்சிகரமான முன்னெடுப்பாகும். இதன்மூலம் 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற சுவர் இடிக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், அனைவரின் நல்வாழ்வையும் உறுதி செய்யும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படும். இதற்கான குழுவையும் தெலங்கானா அரசு அமைத்துள்ளது.

தெலங்கானா காட்டிய வழியை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும். நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும். நாங்கள் அதனை நடத்திக் காட்டுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

Read Entire Article