ARTICLE AD BOX
Photos Of Samantha Removed Tattoo Of Naga Chaitanya : தென்னிந்தியாவின் நட்சத்திர நாயகியாக விளங்குபவர், நடிகை சமந்தா. இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை எவ்வளவு காதலித்தார் என்பதும், அவரை திருமணம் செய்த பிறகு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால், இவர்களின் மன வாழ்க்கையில் என்ன நடந்தது-ஏன் விவகாரத்து பெற்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இப்போது, நாக சைதன்யா சோபிதாவை திருமணம் செய்து கொண்டு வரிசையாக இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டு வருகிறார். சமந்தாவும் நாக சைதன்யாவும் காதல்-திருமண உறவில் இருந்த போது ஒரு டேட்டூ போட்டுக்கொண்டனர். இந்த டாட்டூவை தற்போது சமந்தா அழித்திருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்த போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டாட்டூவை அழித்த சமந்தா?
காதலில் இருக்கும் இளசுகள், தாங்கள் தற்போது காதலிக்கும் நபர்தான் இனி வாழ்க்கை முழுவதும் வரப்போகிறார் என்று நினைத்துக்கொண்டு அவருக்காக பல விஷயங்களை செய்வதுண்டு. அதில் ஒன்று, மேட்சிங்-ஆக டாட்டூ குத்திக்கொள்வது. சமந்தாவும், நாக சைதன்யாவும் ஒரே Arrow Symbol-ஐ டாட்டூவாக குத்தியிருப்பர். இது, அவர்கள் ஒன்றாக இருந்த போது பெரிதாக பேசப்பட்டது.
இந்த நிலையில், சமந்தா சமீபத்தில் வெளியிட்ட சில பதிவுகளில் அந்த டாட்டூ அழிக்கப்பட்டது போல உள்ளது. இதனால், தனது காதல் கணவனே வேறு ஒரு பெண்ணை கரம் பிடித்த பிறகு, இந்த டாட்டூ தன் கையில் எதற்கு என யோசித்து சமந்தா இதனை அழித்திருக்கலாம் என ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர்.
கண்மூடித்தனமான காதல்..மனமுடைந்த சமந்தா..!
நடிகை சமந்தா, திருமணத்திற்கு முன்பு ஒரு பிரபல நடிகரை டேட்டிங் செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் காதல் முறிவு ஏற்பட்ட பின்பு, அவர் நாக சைதன்யாவை சுற்றி வந்தார். இவர்கள் இருவரும் சில வருடங்கள் காதல் உறவில் இருந்த பின்பு, தடபுடலாக திருமணம் செய்து கொண்டனர். அப்போது நாக சைதன்யா மகிழ்ச்சி பெருமிக்க அழுதது, நாக சைதன்யாவின் குடும்பத்தினருடன் நெருங்கிய உறவில் இருந்தது போன்ற விஷயங்கள் அவரது ரசிகர்களையும் மகிழ்ச்சி படுத்தியது. ஆனால், யாரும் எதிர்பாராத வெடிகுண்டாய் வந்து விழுந்தது, இவர்களின் விவாகரத்து செய்தி!
இந்த செய்தி வந்த உடனேயே, சமந்தா புஷ்பா படத்தில் ஒரு பாடலில் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இதனால், இந்த விவாகரத்திற்கு சமந்தாதான் காரணம் என்று சிலர் முத்திரை குத்தி விட்டனர். தன்னை பற்றி தவறாக பல வதந்திகள் வந்த போதும், அதற்கு செவி சாய்க்காமல், தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தார் சமந்தா.
சமந்தாவின் விவாகரத்திற்கு பிறகு, அவர் நடித்த படங்கள் அனைத்துமே தோல்வியுற்றன. அவர் நடித்திருந்த வெப் தொடருக்கு கூட நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் மயோசிடிஸ் நோயால் வேறு பாதிக்கப்பட்டார். வாழ்க்கையில் தனக்கு 360 டிகிரியில் இருந்தும் பல பிரச்சனைகள் ஏற்பட்டிருந்த போதும், தினமும் மன அமைதிக்காக பல தினசரி நடவடிக்கைகளை மேற்கொண்டு அதை பின்பற்றியும் வருகிறார், நடிகை சமந்தா.
இரண்டாம் திருமணம்..
நாக சைதன்யா, கடந்த ஆண்டு நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சமீபத்தில் கார் ரேசிங் செல்வது போல புகைப்படம் எடுத்து பதிவிட்டிருந்தனர். சமந்தா, இன்னும் சிங்கிளாக தன் வாழ்க்கையை தன் இஷ்டப்படி வாழ்ந்து வருகிறார்.
மேலும் படிக்க | சமந்தாவின் புதிய காதலர் இவரா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ