ARTICLE AD BOX

Pandian Stores2: தற்போது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடை தயவுசெய்து 90ஸ் கிட்ஸ் யாரும் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அரசியின் காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்து விட பாண்டியன் உடைந்து போய்விடுகிறார். கோமதி தன்னுடைய மகளிடம் கோபமாக இத்தனை பேர் இருந்தும் எங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனது வந்தது என சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் அவருடைய போனை எடுத்து அவனுடன் எத்தனை நாட்களாக பழக்கத்தில் இருக்கிறாள் என பார்க்குமாறு சரவணனிடம் சொல்கிறார். அவரும் அரசியின் மொபைல் ஃபோனை எடுத்து தேடி பார்க்க குமரவேல் நம்பரை குமுதா என சேமித்து வைத்திருப்பது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜி அவனுக்கு பெண் பார்ப்பதாக தகவல் வந்தபோது யார் அவனிடம் சிக்கி தவிக்கப் போகிறார்கள் என கவலைப்பட்டேன் நீயே இப்படி செய்வாய் என நினைக்கவில்லை என அழுது கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார். சரவணன் போனில் குமரவேல் அரசிக்கு கிப்ட் வாங்கி கொடுத்திருப்பதை தெரிந்து கொள்கிறார்.
இதில் கடுப்பான கோமதி அவருடைய பையைத் தேடிப் பார்க்க சில சாக்லேட்கள் கிடைக்கிறது. பின்னர் பீரோவில் தேடிப் பார்க்க கொலுசு முதல் புகைப்படங்கள் வரை நிறைய பரிசு வெளிவர கோமதி அதிர்ச்சியில் அரசியை வந்து திட்டி தீர்த்து விடுகிறார்.
அரசி தப்பு பண்ணி விட்டேன் அம்மா என்னை மன்னிச்சிடுங்க என கையெடுத்து கும்பிடும் போது அவர் கையில் தங்க மோதிரம் இருப்பதை பார்த்து நிச்சயம் மட்டும் தான் செய்து இருக்கியா? இல்லை கல்யாணத்தையே முடிச்சிட்டியா என கத்துகிறார்.
இதில் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாகி நிற்க, ஒரு கட்டத்தில் வெறுப்பான கோமதி அரசிக்கு சாபம் விடுகிறார். எல்லோரும் அவரை பிடித்து அமைதியாக முயற்சி செய்கின்றனர்.
இந்த பிரச்சனையில் அடுத்து அரசி குமரவேலை நம்பி சென்று திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்றைய எபிசோடில் மீனா அமைதியாக இருக்க அவருக்கு சுகன்யா மீது சந்தேகம் இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
ஆனால் ஆரம்பத்தில் சொன்னது போல பொதுவாக இன்றைய எபிசோட் 90ஸ் கிட்ஸ்களுக்கு நாஸ்டாலஜிக்காகவே இருக்கும். அத்தனை பேரும் காதலித்து இப்படி கிப்ட்டுடன் வீட்டில் மாட்டி அடிவாங்கிய சம்பவம் அப்பட்டமாக நடந்து இருக்கலாம்.