ARTICLE AD BOX
புரிதல் என்பது நம் அறிவின் செயல்பாட்டில் ஒரு முக்கியமான அம்சம். நாம் தெளிவாக இருந்தால் மட்டுமே இந்த உலகத்தில் வாழ முடியும். உங்கள் உள் உணர்வுக்கு செவி சாயுங்கள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் அது உங்களுக்கு சொல்லும்- அந்தோணி ஜேடி ஏஞ்சலோ…..
தவறான புரிதல் தான் பல பிரச்சனைகளுக்கு காரணம் ஒருவர் ஒன்றை சொன்னால் அதை நாம் வேறு விதமாக புரிந்து கொள்கிறோம். நாம் ஒரு விஷயத்தை சொன்னால் எதிரில் இருப்பவர் அதற்கு குதர்க்கமான அர்த்தம் கொள்கிறார். உன் நன்மைக்கு தான் சொல்றேன் என்று அப்பா சொல்லும்போதெல்லாம் மகனுக்கு அவர் விரோதியாக தெரிகிறார். ஒழுங்கா படி நல்ல மார்க் இல்லைன்னா இந்த காலத்துல வேலை கிடையாது கஷ்டம் என்று அவர் அறிவுறுத்தினால் தனக்கு சாபம் விடுவதாக பையன்கள் நினைக்கிறார்கள். அதிகாலையில் எழுந்து குளித்து கடவுளை தொழுது அன்றைய கடமைகளை தொடங்கினால் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்று பாட்டி சொல்கிறாள் பழங்காலத்து பெரிசு ஏதோ உளறுது என்றுதானே இளசுகள் கேலி பண்றாங்க. சில குடும்பங்களில் கணவன் மனைவி சண்டைகள் பெரும் பிரச்சனை காலத்திற்கும் அவை ஓய்வதில்லை காரணம் என்ன ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் தான் காரணம். வருமானம் இருக்கும் வசதிகள் இருக்கும் ஆனால் புரிதல் இருக்காது. நிலத்தின் தன்மையை தவறாக புரிந்து கொண்டால் விதைப்பதில் பயன் இருக்காது விளையாட்டிலும் கூட விதிகளை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால் விளையாட்டு வினையாகி விடும். தேர்வு எழுத உட்கார்ந்தவனுக்கு வேர்த்து விடுகிறது நன்றாக படித்துவிட்டு தான் வந்திருக்கிறான் எனினும் கேள்விகளில் உள்ள சூச்சுமத்தை புரிந்து கொள்ள முடியாமல் பதற்றத்தில் தவிக்கிறான். அற நூல்களை தலைமாட்டில் வைத்துக் கொண்டு தூங்கினால் அறிவு வளர்ந்து விடாது புரிந்து கொள்வதும் புரிந்து கொண்டவற்றை வாழ்வில் செயல்படுத்துவதும் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும். உபதேசம் முடிந்ததும் சீடர்களை பார்த்து என்ன புரிகிறது என்று கேட்டார் இறுதியில் தாங்கள் இப்படி கேட்பீர்கள் என்று எங்களுக்கு அப்போதே புரிகிறது என்றான் சீடன் சீடர்களை புரிந்து கொள்வதில் தாகம் கொள்ளுங்கள். செவியில் வாங்குவது உள்ளே செல்ல வேண்டும் அப்படி ஆனால்தான் புரிந்து கொள்ள வேண்டியவற்றை புரிந்து கொள்ள முடியும். அடைய வேண்டியவற்றை அடைய முடியும் என்றால் குரு. குடும்ப வாழ்வில் பொதுவாழ்வில் சமூகத்தில் ஆரோக்கியமான உறவு நிலை வேண்டுமா? வெற்றி வேண்டுமா அப்படி எனில் எல்லாவற்றிலும் சரியான புரிதல் நமக்கு வேண்டும்..!!