நயன்தாரா வந்ததும் என்னை ஏமாற்றிவிட்டார் சிம்பு!.. புலம்பும் பிரபல நடிகை…

3 hours ago
ARTICLE AD BOX

Nayanthara: சினிமாவில் தற்போது சூப்பர் ஹிட் நடிகையாக இருக்கும் நயன்தாரா வந்த பின் தன்னை நடிகர் சிம்பு ஏமாற்றி விட்டதாக பிரபல நடிகை ஒருவர் தெரிவித்திருப்பது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு. அதை தொடர்ந்து அவர் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தவர் முதல் முறையாக வல்லவன் திரைப்படத்தை இயக்கினார்.

அப்படத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. நடிகை நயன்தாராவின் சினிமா கேரியரை மாற்றியதும் இந்த திரைப்படம் தான் என்று கூறவேண்டும். இப்படத்தில் நடிகர் சிம்புவுடன் தோழியாக சந்தியா, முன்னாள் காதலியாக ரீமாசென் மற்றும் காதலியாக நயன்தாரா நடித்திருந்தனர்.

படத்தில் வில்லன்கள் இல்லாமல் வில்லியுடன் நடிகர் சிம்பு நடிக்க படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் காதல் வசப்பட்டனர். ஆனால் அவர்கள் காதல் சில காலம் நீடிக்காமல் பிரேக் கப்பில் முடிந்தது.

தற்போது இருவரும் தங்களுடைய சினிமா கேரியரில் வளர்ந்து வருகின்றனர். நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்து அவர்களுக்கு தற்போது இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். நடிகர் சிம்பு தன்னுடைய சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வெற்றி கரமாக அதை செய்து வருகிறார்.

இந்நிலையில் வல்லவன் திரைப்படத்தில் நடித்த சந்தியா இப்படம் குறித்து கவலை தெரிவித்து இருக்கிறார். படத்தில் நடிகை சந்தியா முதலில் சிலம்பரசனின் முன்னாள் காதலியாக இருப்பாராம். அவர் மீது கொண்ட அதீத காதலால் அவரை கடத்துவது தான் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் நயன்தாரா படத்திற்குள் வந்ததும் சொல்லப்பட்ட கதையை மொத்தமாக மாற்றி வேறு விதத்தில் இயக்கி விட்டதாக காதல் சந்தியா கவலை தெரிவித்து இருக்கிறார்கள். அவர் பிரபலமாக இருந்தபோது வெளியான திரைப்படத்தில் அவருக்கு போதுமான காட்சிகள் இல்லை என்பது தான் உண்மை.

வெற்றிகரமாக இருந்த நடிகை சந்தியா தற்போது சினிமாவை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Read Entire Article