ARTICLE AD BOX
Gossip: சமீபத்தில் வெளியான அந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அந்த நடிகரும் இயக்குனரும் செம ஹேப்பி.
ஆனா அந்த நடிகை மட்டும் அப்செட்டில் இருக்கிறாராம். பக்கத்து மாநிலத்திலிருந்து நடிக்க வந்திருக்கும் அந்த நடிகை படத்தில் இன்னொரு ஹீரோயின் இருக்கும் விஷயமே கடைசிவரை தெரியாதாம்.
இயக்குனர் கதை சொன்ன போது அப்படியே இந்த விஷயத்தை மூடி மறைத்திருக்கிறார். நடிகையும் தனக்கு ஒரு நல்ல பிரேக் இப்படத்தின் மூலம் கிடைக்கும் என நம்பி ஓகே சொல்லி இருக்கிறார்.
நம்ப வச்சு மோசம் செய்த இயக்குனர்
படப்பிடிப்பில் கூட இந்த விஷயம் நடிகைக்கு தெரியாமல் இயக்குனரும் நடிகரும் பார்த்துக் கொண்டார்களாம். கடைசியில் இரண்டு ஹீரோயின்களும் சேர்ந்து வரும் காட்சியை படமாக்கும் போது தான் நடிகைக்கு சந்தேகம் வந்திருக்கிறது.
இது பற்றி இயக்குனரிடம் கேட்டபோது முழு படத்தையும் பாருங்கள் என சொல்லி இருக்கிறார். அதன் பிறகு படத்தை பார்த்த நடிகை செம டென்ஷன் ஆகியிருக்கிறார்.
ஏனென்றால் மற்றொரு ஹீரோயினுக்கு தான் கிளாமர் பாடல் என கொஞ்சம் முக்கியத்துவம் இருந்திருக்கிறது. அதேபோல் படம் வெளியாகி அந்த நடிகை தான் கொண்டாடப்பட்டு வருகிறார்.
படம் ஹிட் ஆனாலும் இந்த சதியால் நடிகை நொந்து போயிருக்கிறார். இப்படி நம்ப வச்சு கழுத்தறுத்திட்டாங்களே என இயக்குனர் நடிகர் மீது நடிகை செம காண்டில் இருக்கிறாராம்.