ARTICLE AD BOX
தனுஷ் எந்த ஹீரோயினுடன் ஹோலி கொண்டாடிருக்காரு பாருங்க.. செம க்யூட்
மும்பை: தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் பெரிய வெற்றியை பெறாமல் ஏமாற்றத்தையே தந்தது. அடுத்ததாக அவர் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை, சேகர் கம்முல்லா இயக்கத்தில் உருவாகியிருக்கும் குபேரா ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. தற்போது அவர் ஹிந்தியில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் என்ற பாலிவுட் படத்தில் மும்முரமாக நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார்.
இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் தனது தடத்தை பதித்தவர். ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னாவை வைத்து அவர் இயக்கியிருந்த பவர் பாண்டி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்தார். நிச்சயம் பவர் பாண்டி போல் இந்தப் படமும் மெகா ஹிட்டடிக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக படம் தோல்வியை சந்தித்து அப்செட்டாக்கியது.

குபேரா: இந்தச் சூழலில் அவர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவருகின்றன. மிக விரைவில் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெங்கி அட்லூரி என்ற தெலுங்கு இயக்குநருடன் சேர்ந்து வாத்தி படத்தில் சூடுபோட்டுக்கொண்டார் தனுஷ். அதுபோல் குபேராவில் எதுவும் நடந்துவிடக்கூடாது என்று அவரது ரசிகர்கள் வேண்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
இட்லி கடை: இது ஒருபக்கம் இருக்க இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி நடித்திருக்கிறார் அவர். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்துவிட்டது. முதலில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அன்றைய நாள் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகவிருப்பதால் ரிலீஸை தள்ளி வைக்க தனுஷ் திட்டமிட்டிருப்பதாகவும்; ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.
அடுத்தடுத்த படங்கள்: தமிழை பொறுத்தவரை இட்லி கடை, குபேரா உள்ளிட்ட படங்கள் தவிர்த்து தனுஷிடம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இளையராஜாவின் பயோபிக், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு படம் என எக்கச்சக்க படங்கள் இருக்கின்றன. இவை தவிர்த்து செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 ஆகிய படங்கள் உருவாவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கருதப்படுகிறது. இன்றைய தேதிக்கு அதிக படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர் என்றால் அவர் தனுஷ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் கலக்கும் தனுஷ்: தனுஷ் தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் கலக்குபவர். ஏற்கனவே அவர் ஹிந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் ராஞ்சனா திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார். இந்நிலையில் அந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. அதன்படி படத்துக்கு தேரே இஷ்க் மெய்ன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக ராஞ்சனா போல் இந்தப் படமும் ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணி ஹீரோவை இயக்கும் கௌதம் மேனன்?.. அண்ணனுக்கு அடுத்து தம்பியா?.. காம்போ சூப்பர்தான்
ஹோலி கொண்டாடிய தனுஷ்: படத்தின் ஷூட்டிங் டெல்லியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் நாடு முழுவதும் இன்று ஹோலி கொண்டாடப்பட்டது. அதனையொட்டி ஆனந்த் எல்.ராய், கீர்த்தி சனோன், தனுஷ் ஆகியோரும் ஷூட்டிங்கில் ஒன்றாக ஹோலி கொண்டாடினார்கள். அதுதொடர்பான புகைப்படத்தை கீர்த்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.