நன்கு யோசித்து பேசும் குணமுடையவர்களின் நற்குணங்கள் என்னென்ன தெரியுமா?

2 hours ago
ARTICLE AD BOX

ம்மில் பலரும் தாம் இருக்கும் இடம், பேசும் பொருள் ஆகியவற்றை நன்கு உணராமல், எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற முறையில் பேசி விடுவதே வழக்கமாக உள்ளது. இதற்கு விதி விலக்காக மிகச் சில பேர், நன்கு யோசித்து, பிறகு பேசும் குணமுடையவர்களாக உள்ளனர். இவர்களிடமுள்ள 10 நற்குணங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

1.பொறுமை: இவர்கள் எந்த ஒரு விஷத்திலும் தங்கள் முடிவைக் கூறும் முன்பு, சிறிது நேரம் எடுத்து சிந்தித்த பின்பே பேசுவர். ஒருமுறை சிந்திய வார்த்தைகளை திரும்ப எடுக்க முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிவர். அவர்கள் பேசியதற்கு பின்னாளில் வருத்தப்படும் சூழல் ஒருபோதும் வராது. அவர்கள் வினையாற்றும் விதம் தாமதமாக செயல்படுவதாக நினைக்கச் செய்தாலும், உண்மைக் காரணம் அவர்களின் பொறுமை.

2.ஆழ்ந்த புரிதல்: சிந்திந்துப் பேசும் குணமுடையவர்கள் எதையும் முழுமையாகப் புரிந்துகொண்ட பின்பே பேசுவர். அவர்கள் பேசுவதை விட, பிறர் பேசுவதை கவனமுடன் கேட்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுவர். உரக்கப் பேசுவதைவிட உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து பேசுவது அவர்களின் கொள்கையாக இருக்கும்.

3.அமைதியாயிருத்தல்: எந்த பிரச்னைக்கும் தீர்வு கூறும் முன், அமைதியுடன் பிரச்னையின் உள்ளும் புறமும் பகுத்தாய்ந்து, பிறகு அதை வார்த்தைகளில் வெளிக்கொண்டுவரும்போது, தீர்வானது ஆழ்ந்த அர்த்தமுடையதாக அமையும். அமைதியில் பிறக்கும் வார்த்தைகள் அறிவுபூர்வமானதாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாததாகவும் அமையும்.

இதையும் படியுங்கள்:
பிறர் மீது இரக்கம் கொள்ளுங்கள் வாழ்க்கை இன்பமாகும்!
Virtues of those who are thoughtful and talkative

4.கவனித்து உள்வாங்கும் கலை: நம்மில் பலரும் தாம் கேட்கும் விஷயத்தில், பேசப்படும் பொருள் மற்றும் கேட்பவரின் ஈடுபாட்டின் அடிப்படையில், 25 முதல் 50 சதவிகிதத்தை மட்டுமே உள்வாங்கிக் கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் அவர்கள் தாம் கேட்கும் விஷயத்தில் முழுமையாக கவனம் செலுத்தாமல் அதற்கு நாம் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை யோசிப்பதில் கவனத்தை சிதற விடுகின்றனர். இதற்கு மாறாக யோசித்து பேசும் குணமுடையோர் பிறர் பேசுவதில் உள்ள கருத்தை முழுக்க உள் வாங்கிக் கொள்வதிலேயே கவனத்தை செலுத்துவார்கள்.

5.உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை உற்றுக் கவனித்தல்: யோசித்து பேசும் திறன் உடையோர் தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வர். பிறர் தம் உணர்ச்சிகளை மறைத்து வைக்க முயன்றாலும், இவர்கள் அதை ஊன்றிக் கண்டுபிடித்து, அவர்களிடம் அன்பு, பச்சாதாபம் மற்றும் மரியாதை செலுத்தி, கவனத்துடன் சூழ்நிலையை சுமுகமாக்க முயல்வர்.

6.சூழ்நிலைக்கேற்ப பேச்சுத்திறனை மாற்றிக்கொள்ளுதல்: யோசித்து பேசும் குணமுடையோர் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பவரின் பேச்சுத் திறன், உடல் மொழி, ஸ்டைல், மனநிலை அங்கு நிலவும் சூழல் போன்றவற்றிற்கேற்ப தன்னுடைய குரல், பேசும் வார்த்தைகள், உடல் மொழி ஆகியவற்றை மாற்றிக்கொண்டு பேசுவார்கள். இதனால் அவர்களுக்குள் ஒத்த உறவு ஏற்படும்; பிரச்சினைகள் சுலபமாகவும் நேர்மறை விளைவுகளோடும் தீர்த்து வைக்கப்படும்.

7.பிறரை ஊக்குவித்து வழி நடத்த உதவும் குணம்: இவர்கள் பிறர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டு அவர்களை சாந்தப்படுத்தும் வகையில் பதிலளித்து, அவர்கள் கீழ் நோக்கிச் சென்று விடாமல் வாழ்வில் மேனிலை பெற சிறந்த முறையில் உதவி புரிவர்.

8.சுய விழிப்புணர்வு கொண்டிருத்தல்: யோசித்து பேசும் குணமுடையோர், தங்களின் பலம், பலவீனம், உணர்ச்சிகள், நம்பிக்கைகள் மற்றும் ஊக்குவிப்புகள் ஆகியற்றை நன்கு புரிந்து கொண்டவர்களாக இருப்பர்.

இவைகளே அவர்களின் மற்ற நற் குணங்களுக்கெல்லாம் அடித்தளமாக அமையும். மேலும் அவர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை சூழ்நிலைக்கேற்ப வழி நடத்தவும் உதவி புரியும். மேலும், அவர்களின் பேச்சும் செயல்களும் பிறரை எவ்விதத்தில் பாதிக்கும் என உணர்ந்து கொள்ளவும் உதவும்.

9.பேச்சில் தெளிவு கொண்டிருத்தல்: இவர்கள் பேசுவதற்கு முன் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து உணர்ச்சிகளுடன் கோர்த்து பிறர் மனம் புண்படா வண்ணம், நன்கு புரியும்படி பேசுவதில் தேர்ந்தவர்களாயிருப்பர். இதனால் எப்பேர்ப்பட்ட பிரச்னையாயினும் சுமுகமாக முடியும்.

10.மற்றவர் பேச்சை மதித்து நடத்தல்: மற்றவர் பேச்சை மரியாதை கொடுத்து கவனித்து, புரிந்துகொண்டு பதிலளிக்கும் இவர்களின் குணம், பிறருடன் நடக்கும் டிஸ்கஷன் சிறந்த முறையில் அர்த்தமுள்ளதாக முடிய உதவும்.

Read Entire Article