ARTICLE AD BOX
வாஷிங்டன்,
அமெரிக்காவின் டென்வர் மாகாணத்தில் இருந்து ஹூஸ்டன் விமான நிலையத்துக்கு ஒரு விமானம் புறப்பட்டது. பிரான்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது ஒரு பெண் தனது பின்னால் இருந்த பயணியிடம் இருக்கையை மாற்றுமாறு கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் அந்த பெண்ணின் இருக்கை மற்றும் ஜன்னலை காலால் எட்டி உதைத்து உடைக்க முயன்றார். அப்போது பயணிகள் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் அந்த வாலிபரை பிடித்து நிறுத்தினார். விமானம் ஹூஸ்டனில் தரையிறங்கிய பிறகே பயணிகள் நிம்மதியடைந்தனர். இதனையடுத்து விமான நிலையத்தில் இருந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.