ARTICLE AD BOX
1990 காலகட்டத்தில் விறகு பொறுக்கி
அதை தலையில் சும்மா வந்து..
அடுப்பை சாணிபோட்டு மொழுகி
அம்மியில் மசாலா அரைத்து கமகமனு மனக்க மனக்க சமைத்து, குடும்பமே
ஒன்னா உட்கார்ந்து தலைவாழை போட்டு சாப்பிட்டோம்…
2025 இன்று விறகு பொறுக்க ஆளும் இல்லை, விறகும் இல்லை. விறகு என்றால் என்ன என்று கேட்கிறார்கள்..
சாணி போட்டு மொழுக அடுப்பும் இல்லை, சாணி அள்ள ஆளும் இல்லை,, சாணியை கையால் தொட்டால் வீசும் என்கிறார்கள்
அம்மியில் அரைக்க அம்மியும் இல்லை, அம்மியில் அரைக்க
யாருக்கு உடம்பில் தெம்பும் இல்லை
இப்போது ஒன்னா உட்கார்ந்து தலைவாழை போட்டு சாப்பிட யாரும் இல்லை, பார்சால் சாப்பாடு தான்
இனிமேல் வீடு கட்டும் போது
சமையலறைக்கு என்று தனி இடம்
ஒதுக்கவேண்டிய அவசியம் இல்லை..
“டீ “காபி முதற்கொண்டு ஆன்லைனில் கிடைக்கிறது
இரவு முழுவதும் மொபைல் போனில் மூழ்கி காலையில் ஐந்து மணிக்கு படுத்து பத்து மணிக்கு வரைக்கும்
உறங்குகிறாள் மனைவி
வேலைக்கு போகும் கணவனை ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி காலை உணவு மதிய உணவு வாங்கிக் கொள். நான் எனக்குத் தேவையானதை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று மனைவி திரும்பவும் படுத்துக் கொள்கிறார்கள்
இரவு உணவு ஒன்றாக சேர்ந்து சாப்பிடலாம் என்று கணவன் நினைக்கும் போது நான் இப்போதுதான் சாப்பிட்டேன் நீங்கள் சாப்பிட்டு தூங்குங்கள்
எனக்கு பசிக்கும்போது நான் ஆன்லைனில் ஆர்டர் பண்ணிக்கிறேன் என்கிறார்கள்
நாகரீகமான வாழ்க்கையில் எல்லாத்தையும் இருந்து கொண்டு வருகிறோம்…
கனவாகிப்போனது அந்த இனிய காலம்