நடுவானில் தொழில்நுட்ப கோளாறு - வங்கதேச விமானம் நாகபுரியில் அவசர தரையிறக்கம்

3 days ago
ARTICLE AD BOX

வங்கதேசத்தில் இருந்து துபை நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து, மகாராஷ்டிர மாநிலம், நாகபுரி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

வங்கதேசத்தின் பிமான் வங்கதேச ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், 396 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களுடன் புதன்கிழமை நள்ளிரவில் துபை நோக்கி சென்று கொண்டிருந்தது. நடுவானில் விமானத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து, மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்ட அந்த விமானம், அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையொட்டி, விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னா், தனி ஓடுபாதைக்கு விமானம் கொண்டு செல்லப்பட்டு, அதிலிருந்த பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டனா். சுமாா் 19 மணிநேரத்துக்கு பிறகு அந்த நிறுவனத்தின் வேறு விமானம் மூலம் அவா்கள் துபைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Read Entire Article