நடிகைகள் மதுவே குடிக்கும்போது சிகரெட் புகைத்தால் தப்பா? கிரித்தி சனோன் கேட்கிறார்

2 hours ago
ARTICLE AD BOX

மும்பை: பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான தனுஷ், மீண்டும் அவரது இயக்கத்தில் ‘அட்ராங்கி ரே’ என்ற படத்தில் நடித்தார். தற்போது 3வது முறையாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். தனுஷ் ஜோடியாக கிரித்தி சனோன் நடிப்பதை உறுதி செய்த படக்குழுவினர், ஒரு டீசரை வெளியிட்டுள்ளனர்.

அதில், தெருக்களில் வன்முறைச் சம்பவம் நடக்கும்போது, தனது கையில் பெட்ரோல் கேனுடன் வரும் கிரித்தி சனோன், அதை தலையில் ஊற்றி, வாயில் சிகரெட்டை வைத்து லைட்டரை ஆன் செய்வது போன்ற காட்சி ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது. மேலும், அவர் சிகரெட் புகைக்கும் காட்சிக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பற்றி கிரித்தி சனோன் கூறுகையில், ‘நடிகைகள் மது குடிக்கும் காட்சிகளே படமாகிறது. சிகரெட் குடித்தால் தப்பா?’ என கேட்டிருக்கிறார்.

Read Entire Article