ரிங் ரிங் விமர்சனம்

5 hours ago
ARTICLE AD BOX

சாக்‌ஷி அகர்வால்-பிரவீன் ராஜா, விவேக் பிரசன்னா-ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப்-ஜமுனா, அர்ஜூனன்-சஹானா ஆகிய 4 இளம் ஜோடிகளும் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர்கள். கலகலப்பான பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அவர்கள், திடீரென்று ஒரு கேம் விளையாடுகின்றனர். கணவன், மனைவி இருவரில், கணவனுக்கு வந்த போனை ஸ்பீக்கரில் அடுத்தவர்கள் கேட்க வேண்டும்.

அதுபோல், மனைவிக்கு வந்த போனை ஸ்பீக்கரில் அடுத்தவர்கள் கேட்க வேண்டும். இப்படி வரும் போன் அழைப்பின் மூலம் பல விஷயங்கள் அம்பலமாகிறது. இதனால், நான்கு ஜோடிகளின் வாழ்க்கையிலும் புயல் வீசுகிறது. இறுதியில் என்ன நடந்தது என்பது மீதி கதை. விவேக் பிரசன்னா, சாக்‌ஷி அகர்வால், டேனியல் அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜூனன், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா ஆகியோர், தங்கள் கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். ஒருவரைப் பற்றிய ரகசியம் இன்னொருவருக்கு தெரியும்போது வெளிப்படுத்தும் ரியாக்‌ஷன்கள் இயல்பாக இருக்கின்றன.

சாக்‌ஷி அகர்வால், பிரவீன் ராஜாவுக்கு இடையிலான சந்தேகம் உடைபடும் காட்சி மனதில் நிற்கிறது. நன்றாக ஒளிப்பதிவு செய்துள்ளார் பிரசாத். காட்சிகளுக்குப் பொருத்தமான பின்னணி இசையை வசந்த் இசைப்பேட்டை சிறப்பாக வழங்கியுள்ளார். ‘செல்போனின்றி அமையாது உலகு’ என்பதை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் கொண்டு சென்றுள்ளார், இயக்குனர் ‘கந்தகோட்டை’ எஸ்.சக்திவேல். நாடகத்தன காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

Read Entire Article