ARTICLE AD BOX

தெலுங்கு திரை உலகை சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் இதுவரை 150க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கென்று தெலுங்கு சினிமாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் தற்போது விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்துள்ளார். 18 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷாவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவி நடிகை ஸ்ரீலீலாவிற்கு நடந்து முடிந்த மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பான பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை ஸ்ரீஷீலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஸ்ரீலீலா தற்போது நடித்து முடித்துள்ள படம் ராபின். நிதின் ஹீரோவாக நடிக்கும் இந்த படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.