ARTICLE AD BOX
நடிகை பார்வதி நாயருக்கு விரைவில் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
சென்னை: நடிகர் அஜித்குமார் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் ஒரு நல்ல நடிகையாக அறிமுகமான நடிகை பார்வதி நாயர். அண்மையில் வெளியான லியோ படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அடுத்தடுத்து பிஸியாக நடித்து வரும் பார்வதி நாயரின் நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.
மலையாள சினிமாவில் சின்னச்சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை பார்வதி நாயர், தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து அறிமுகமானார். அந்த படத்திற்கு பின், என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமானார். அந்த படம் அருண் விஜய்க்கு எப்படி திருப்பு முனையாக அமைந்ததோ அதை போல, இவருக்கு அந்த படம் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அந்த படத்தில் அருண் விஜய்யின் மனைவியாக நடித்து பெயர் எடுத்தார்.
பார்வதி நாயர்: தமிழில் பார்த்திபன் இயக்கத்தில் உருவான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில், அவர் ஒரு வித்தியாசமான ரோலில் நடித்தார். இந்த படத்திற்கு அவருக்கு ரைசிங் ஸ்டார் என்ற தலைப்பின் கீழ் எடிசன் விருதுகள் வழங்கபட்டது. எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் லோகேஷ் கனகராஜின் எழுத்தில் உருவான வெள்ள ராஜா எனும் இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். பாபி சிம்கா, காயத்ரி சங்கர் யுதன் பாலாஜி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். தற்போது இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
விரைவில் திருமணம்: ட்விட்டரில் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பாலோவேர்களையும், இன்ஸ்டாகிராமில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை வைத்து இருக்கும் பார்வதி நாயர். இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். போட்டோ ஷுட், சினிமா என பிஸியாக இருக்கும் பார்வதி நாயருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பார்வதி நாயர் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்டான நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி திருமண தேதியை கேட்டு வருகின்றனர்.