ARTICLE AD BOX
சென்னை: மகளிர் தினத்தினையொட்டி மதுரையில் உள்ள கல்லூரியில் விவி என்டெர்டெயின்மென்ட் நிறுவனர் நடிகர் விஜய்விஷ்வா அமெரிக்கன் கல்லூரியுடன் இணைந்து இரண்டு சாதனைகளை கல்லூரியின் மைதானத்தில் நிகழ்த்தியுள்ளார். முதலாவது சாதனையாக 2000 பெண்கள் கைகோர்த்து விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் உருவப்படத்தை மனித சங்கிலியுடன் இணைந்து உருவாக்கினார்கள். இரண்டாவதாக சாதனையாக பெண்களின் ‘சின் நா’ தற்காப்பு கலையாகும். 1000 பெண்கள் பங்கேற்பாளர்களைக் கொண்ட இந்த நிகழ்வு சுய பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒழுக்கம் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் நடத்தப்பட்டது. இந்த சாதனைகள் புதிய உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு கிராண்ட் யுனிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வி.வி. என்டர்டெயின்மென்ட் வாழ்நாள் சாதனையாளர் விருதை கல்வி மற்றும் சமூகசேவைக்கு தன்னலமற்ற பங்களிப்புக்காக அமெரிக்கன் கல்லூரி முதல்வர் டாக்டர். தவமணி கிறிஸ்டோபருக்கு திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் விருது வழங்கினார்.