ARTICLE AD BOX
புதுடெல்லி: உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் முக்கிய எரிசக்தி ஆதாரமாக நிலக்கரி உள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறது.
இந்தியாவில் கடந்த நிதியாண்டில்(ஏப்ரல் 2023 – மார்ச் 2024) ஒட்டுமொத்தமாக 997.83 மில்லியன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது நடப்பு நிதியாண்டில் 11 நாள்கள் முன்பாகவே, மார்ச் 20ம் தேதி(நேற்று முன்தினம்) நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்னை கடந்து புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளது என ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் தள பதிவில், “1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி என்ற மகத்தான மைல்கல்லை கடந்தது ஒரு மகத்தான சாதனையாகும். இது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தருணம். இது எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, தற்சார்பு இந்தியா ஆகியவற்றின் நமது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
The post நடப்பு நிதியாண்டில் இந்தியா 1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்து சாதனை appeared first on Dinakaran.