ARTICLE AD BOX
கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான வெஸ்ட் இண்டிஸ் அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ 2022-ஆம் ஆண்டு வரை 161 ஐ.பி.எல் டி20 போட்டிகளில் விளையாடி 1560 ரன்களையும், 183 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பொறுத்தவரை அவர் மும்பை அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் சிஎஸ்கே அணிக்காக தோனியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக பல ஆண்டுகள் சிஎஸ்கே அணியுடன் தொடர்ச்சியாக பயணித்திருந்தார்.
தோனியிடம் தான் முதலில் சம்மதம் வாங்கினேன் : டுவைன் பிராவோ
2022-ஆம் ஆண்டு அனைத்து வகையான போட்டிகளிலும் இருந்து ஓய்வினை அறிவித்த அவருக்கு சிஎஸ்கே அணி பவுலிங் கோச்சாக பதவி வழங்கி கவுரவித்தது. அதனை தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்ற போது பவுலிங் கோச்சாக இருந்த அவர் 2024 ஆண்டிலும் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் தான் கே.கே.ஆர் அணியின் மென்டராக தான் ஒப்பந்தமாகி உள்ளதாக அறிவித்து சென்னை அணியில் இருந்து வெளியேறினார். கடந்த பல ஆண்டுகளாக சென்னை அணியில் முக்கிய பங்கு வகித்த பிராவோ இப்படி கொல்கத்தா அணிக்கு மென்டராக சென்றது அப்போதே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் கொல்கத்தா அணிக்கு மென்டராக ஒப்புக் கொள்வதற்கு முன்னதாக தோனியிடம் அந்த முடிவினை கூறிய பிறகுதான் சென்னை அணியில் இருந்து வெளியே சென்றதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
கே.கே.ஆர் அணியிலிருந்து எனக்கு அழைப்பு வந்த போது நான் தோனியை தான் முதலில் அணுகி அந்த முடிவை சொன்னேன். அவர் சம்மதம் சொன்ன பிறகுதான் கொல்கத்தா அணியின் அந்த பதவியை நான் ஏற்றுக்கொண்டேன். அதுதான் நான் அவர் மீது வைத்திருக்கின்ற மரியாதை என்று பிராவோ கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :
இதையும் படிங்க : சுழல் எனும் கலையை காணல.. ஸ்பின்னர்கள் பயத்துல மறந்த இதை தைரியமா செய்யனும்.. ஹர்பஜன் பேட்டி
ஒருவேளை இந்த ஆண்டு கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடினால் நான் கொல்கத்தா அணி தான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவேன். ஏனெனில் நான் அங்கு ஆலோசகராக இருக்கப் போகிறேன். அதனால் அவர்கள் வெல்வதையே நான் விரும்புவேன் தோனியும் அதை புரிந்து கொள்வார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
The post தோனி ஓகே சொன்ன பிறகு தான் நான் அந்த முடிவுக்கே ஒத்துக்கிட்டேன் – டுவைன் பிராவோ வெளிப்படை appeared first on Cric Tamil.