ARTICLE AD BOX
கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி 3-ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது ஆா்ஜென்டீனா அணி.
இந்தப் போட்டியில் சிறப்பாக கோல்கீப்பிங் செய்து உலகப் புகழ்பெற்றவர்தான் எமிலியானோ மார்டினெஸ்.
32 வயதாகும் இவர் தற்போது ஆா்ஜென்டீனா அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.
2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆா்ஜென்டீனா அணி உருகுவேவை 1-0 என வென்றது.
இந்த அசத்தல் வெற்றியின் மூலம் ஆா்ஜென்டீனா அணி அடுத்த போட்டியில் டிரா ஆனாலே தகுதிபெற்றுவிடும்.
இந்தப் போட்டியில் பல கோல்களை தடுத்தார் எமிலியானோ மார்டினெஸ்.
50 தேசிய கால்பந்து போட்டிகளில் 36 க்ளீன் ஷீட்ஸ் பெற்று அசத்தியுள்ளார். கிளீன் ஷீட்ஸ் என்பது எதிரணியினர் ஒரு கோல்கூட அடிக்காமல் தடுப்பதாகும்.
அதிக போட்டிகள் விளையாடிய ஆர்ஜென்டீனாவின் தலைசிறந்த 3ஆவது கோல்கீப்பராக உருவாகியுள்ளார் எமிலியானோ மார்டினெஸ்.
இதற்கு முன்பாக, உபால்டோ ஃபிலோல் 54 போட்டிகள், செர்ஜியோ ரொமாரியோ 96 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்கள்.