தொழில் வளர்ச்சி – ரிசர்வ் வங்கி எடுத்துள்ள புதிய முடிவு!

2 days ago
ARTICLE AD BOX

நாட்டில் விலைவாசி புள்ளி விவரங்கள் ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், தொய்வடைந்து வரும் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் தர ரிசர்வ் வங்கி விரும்புகிறது.  இதனால் ரிசர்வ் வங்கி மேலும் சில வட்டி குறைப்பு அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி கொள்கை கண்காணிப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கும் முடிவில், விலைவாசி கட்டுப்பாட்டை விட தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி இனி தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக வட்டிக் குறைப்பை தொடர்ச்சியாக மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. . வங்கிகள் தன்னிடம் வாங்கும் கடன்களுக்கான வட்டிகளை ரிசர்வ் வங்கி குறைக்கும் போது நாட்டின் பணப்புழக்கம் அதிகமாகும். தொழில் வளர்ச்சியும் அதிகமாகும். அதே நேரம், வட்டியை அதிகரிக்கும் போது பணப்புழக்கம் குறைந்து பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் என்பது பொருளாதார கோட்பாடு.

The post தொழில் வளர்ச்சி – ரிசர்வ் வங்கி எடுத்துள்ள புதிய முடிவு! appeared first on Rockfort Times.

Read Entire Article