ARTICLE AD BOX

சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் டெண்டர் தொடர்பாக சுமார் ரூ.1000 கோடி வரையில் ஊழல் நடந்திருக்காலாம் என கூறப்பட்டது. இதனை குறிப்பிட்டு இன்று பாஜகவினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிருந்து இன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை அடுத்து, முற்றுகை போராட்டத்திற்கு போலீசார் தரப்பு அனுமதி மறுத்தது. தடையை மீறி போராட்டம் நடத்த முற்படுவோரை தடுத்து நிறுத்தி வீட்டு காவலில் வைத்துள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்த சென்றதால் பாஜக பிரமுகர் வினோஜ் பி.செல்வம் ஆகியோர் வீட்டு காவ்லில் கைது செய்யப்பட்டனர். போராட்டம் நடத்த முயன்ற தமிழிசை தடுத்து நிறுத்தப்பட்டார். அண்ணாமலை வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடுகையில், திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, பாஜக சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, தமிழிசை சவுந்திராஜன், மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?
தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? என தங்கள் போராட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து தனது கடும் விமர்சனங்களை முன்வைத்து பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.
திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, @BJP4Tamilnadu சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, @BJP4Tamilnadu மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா திருமதி @DrTamilisai4BJP,… pic.twitter.com/em0UUH5sjF
— K.Annamalai (@annamalai_k) March 17, 2025