குழந்தைகளின் கண்ணுக்கு ரொம்ப நல்லது... திணை அரிசியில் பொங்கல் இப்படி செஞ்சு குடுங்க!

4 hours ago
ARTICLE AD BOX

குழந்தைகளின் கண்ணுக்கு ரொம்ப நல்லது என்று இந்த திணை அரிசி தானியம் என்று மருத்துவர் கு. சிவராமன் கூறுகிறார். இந்த திணை அரிசியில் பொங்கல் செய்வது எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

Advertisment

திணை அரிசியில் பொங்கல் செய்வது எப்படி என்று வி.எஸ்.கே கிச்சன் யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர்.  திணை அரிசியில் பொங்கல் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம். 1 டம்பளர் திணை அரிசி எடுத்துக்கொள்ளுங்கள், அதனுடன் கால் டம்ப்ளர் உளுந்து சேர்த்து நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். அதை குக்கரில் போடுங்கள், அதில் வழக்கமாக 4 டம்ப்ளர் தண்ணீர் ஊற்றுங்கள். அதனுடன் இஞ்சி பொடியாக நறுக்கிப் போடுங்கள். 1 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிப் போடுங்கள் தேவையான அளவு உப்பு போடுங்கள். கருவேப்பிலையை பொடியாக நறுக்கிப் போடுங்கள், கொஞ்சம் பெருங்காயம் போடுங்கள் அவ்வளவுதான், குக்கரை மூடி வேக வையுன்கள். வழக்கம் போல 3 விசில் வந்த பிறகு இறக்கி விடுங்கள். பின்னர், திறந்து நன்றாகக் கிளறிவிடுங்கள்.

இப்போது இந்த திணை அரிசி பொங்கலைத் தாளிக்க வேண்டும். அதற்கு, ஸ்டவ்வைப் பற்ற வைத்து ஒரு வானலியை வைத்து, அதில் 1 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றுங்கள். மிளகு 1 டீஸ்பூன் அளவு தூளாக நசுக்கி போடுங்கள். சீரகம் சிறிது அளவு போடுங்கள். நன்றாகப் பொரி்ந்த பிறகு, கருவேப்பிலை 1 கொத்து போடுங்கள். அதை எடுத்து, நாம் வேகவைத்துள்ள திணை அரிசி பொங்களில் சேர்த்து நன்றாகக் கிளறிவிடுங்கள். அவ்வளவுதான், இந்த திணை அரிசி பொங்கல் தயார். கண்ணுக்கு நன்மை தரக்கூடிய திணை அரிசி பொங்கலை குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள்.

Advertisment
Advertisements

திணை அரிசியின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து மருத்துவர் கு. சிவராமன் கூறியிருப்பாதாவது: “இன்றைக்கு திணை அரிசி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்றால், குழந்தைகளுக்கு கண்களுக்கு மிகச்சிறப்பான ஒரு தானியம் என்று எடுத்துக்கொண்டால் அது திணை அரிசி மட்டும்தான். கண்ணுக்கு நல்லது எது என்று கேட்டால் எல்லாரும் கோரஸாக கேரட் என்று கூறுவார்கள். ஏனென்றால், கேரட் என்று பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சி ஃபார் கேரட் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். கேரட் ஏன் நல்லது என்றால் அதில் இருக்கக்கூடிய இளஞ்சிவப்பு நிறம், அதற்கு பின்னால் இருக்கக்கூடிய பீட்டா கரோட்டின், அல்லது ஒரு பொன்மஞ்சள் நிறத்துக்கு பின்னால் இருக்கக்கூடிய பீட்டா கரோட்டின் காரணம் என்று அறிவியல் ஆய்வு சொல்லக்கூடிய விஷயம். 

அதே பொன்மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு தானியம் திணை அரிசி மட்டும்தான். கண்ணுக்கு நல்லது செய்யக்கூடிய பீட்டா கரோட்டின் திணை அரிசியில் இருக்கிறது” என்று மருத்துவர் கு. சிவராமன் கூறுகிறார்.

Read Entire Article