தொடர்ந்து பண நெருக்கடியா? நீங்கள் செய்த சின்ன தப்பு தான் காரணம்

4 days ago
ARTICLE AD BOX

Vastu For Business Place  : தொழிலில் நீங்கள் தொடர்ந்து நஷ்டத்தை தான் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதற்கு நீங்கள் செய்யும் சில தவறுகள் தான் காரணமாக இருக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.

தொடர்ந்து பண நெருக்கடியா? நீங்கள் செய்த சின்ன தப்பு தான் காரணம்

வாஸ்து சாஸ்திரத்தில் பல விஷயங்கள் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளையும் சுலபமாக குறைக்க முடியும். வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற கடினமாக உழைப்பது மட்டும் போதாது, வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கும் சில பரிகாரங்களையும் பின்பற்ற வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, கடின உழைப்பு நம்மை சுற்றியுள்ள நேர்மறை ஆற்றலும் முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்களிக்கின்றது. ஆனால் சில சமயங்களில் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் சில தவறுகள் நம்முடைய முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக இருக்கலாம். எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் எந்த வேலையிலும் வெற்றி பெறமுடியாது. முக்கியமாக தொழிலில் செய்யப்படும் சில தவறுகள் சுற்றி எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உங்களது தொழிலில் லாபத்தை அதிகரிக்க விரும்பினாலோ அல்லது முன்னேற விரும்பினாலோ உங்களது தொழில் செய்யும் இடத்தில் சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி அது என்னென்ன தவறுகள் என்பதை குறித்து இங்கு காணலாம்.
 

வாஸ்து சாஸ்திரத்தின் படி கடையில்  அல்லது தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் இருக்கையை மதிக்க வேண்டியது ரொம்பவே முக்கியம். ஏனெனில் ஒரு தொழிலதிபதற்கு அமரும் இருக்கை மற்றும் வியாபாரம் செய்யும் இடம் ரொம்பவே முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் அந்த இடம் சிவபெருமான் அமர்ந்திருக்கும் புனித இடமாக கருதப்படுகிறது. எனவே, இருக்கையில் உட்காரும்போது ஒருபோதும் உணவு சாப்பிடாதீர்கள் மற்றும் தூங்காதிர்கள். இது வாஸ்து சாஸ்திரத்தின் படி தவறு ஆகும். இதனால் நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். வறுமை வரும்.

சனாதன தர்மத்தின் படி, தூய்மை இருக்கும் இடத்தில் தான் லட்சுமி தேவி வசிக்கிறாள். எனவே உங்களது கடை அல்லது நீங்கள் தொழில் செய்யும் இடத்தை திறந்து பிறகு முதலில் தரையை நன்றாக துடைத்து சுத்தம் செய்து விடுங்கள். முக்கியமாக பணம் வைத்திருக்கும் இடத்தை குப்பையாக இருந்தால் லக்ஷ்மி தேவி உங்கள் மீது கோபப்படுவாள்.

உங்களது தொழிலில் முன்னேற்றத்தை அடைய நீங்கள் விரும்பினால் தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து பசுவிற்கு உணவளிக்க வேண்டும். இப்படி நீங்கள் செய்த பிறகு தூங்க கூடாது. மீறினால் செல்வ பற்றாக்குறை ஏற்படும் மற்றும் வியாபாரத்தில் செழிப்பு ஏற்படாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  பணத்தை ஈர்க்க தூங்கும் போது செய்யக்கூடாத தவறுகள்..!!

கடையை மூடும் போது இப்படி செய்யாதே!

நீங்கள் உங்களது கடையை மூடும்போது உங்களது கைகளால் தான் தாழ்ப்பாளைப் போட வேண்டும் கால்களால் அடித்து மூடக்கூடாது. ஏனெனில் இது வாஸ்து குறைபாட்டை உங்களுக்கு ஏற்படுத்தும். இதனால் நீங்கள் வணிகத்தில் எதிர்மறையான தாக்கத்தை சந்திக்க நேரிடும். மேலும் உங்களது வியாபாரம் பாதிக்கப்படும்.

இதையும் படிங்க:  என்னது பெட் ரூம்ல செடி வைக்கணுமா? கணவன் மனைவி கட்டாயம் படிங்க..!!

தொழில் செய்யும் இடத்தில் பண கவுண்டர் அல்லது பணம் வைத்திருக்கும் விதத்தில் கால்களை ஊன்றி உட்கார வேண்டாம் இதன் காரணமாக உங்களது ஆசீர்வாதங்கள் போய்விடும். மேலும் வியாபாரமும் மந்தமாகிவிடும்.

Read Entire Article