தொடர்ந்து கதாநாயகிகளுக்கு 'ரம்யா' என்று பெயர் வைக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தனது 63-வது படமான 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர்� முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாகிறது.

சமீபத்தில், இப்படத்தில் திரிஷா, ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ வெளியானதில் இருந்து பல கேள்வி இணையத்தில் எழுந்து வருகிறது. அதற்கு காரணம், தான் இயக்கிய அனைத்து படங்களிலும் கதாநாயகியின் கதாபாத்திரத்திற்கு ரம்யா என்ற பெயரையே ஆதிக் வைத்துள்ளார்.

அதன்படி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குனராக அறிமுகமான ‛திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் நடித்த நடிகை ஆனந்தி, ‛அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தில் நடித்த தமன்னா, ‛பகீரா' படத்தில் நடித்த அமைரா, ‛மார்க் ஆண்டனி' படத்தில் நடித்த ரித்து வர்மா ஆகியோருக்கு ரம்யா என்ற பெயரையே வைத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

Read Entire Article