ARTICLE AD BOX
மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மும்பை போரிவலி ஈஸ்ட் ஏரியாவில் இருந்த தனது ஒரு சொகுசு அப்பார்ட்மென்ட்டை விற்பனை செய்திருக்கிறார். இந்த அப்பார்ட்மென்ட் வீடு, ‘ஸ்கை சிட்டி’ பில்டிங்கில் இருக்கிறது. இந்த சொசைட்டி 25 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. அக்ஷய் குமாரின் இந்த சொகுசு வீடு, 1,073 சதுர அடியாகும். இதில் 2 கார் பார்க்கிங் வசதியும் இருக்கிறது. அக்ஷய் குமார் 2017ல இந்த அப்பார்ட்மென்ட் வீட்டை 2.37 கோடிக்கு வாங்கினார். இப்போது அதை 4.35 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார்.
இந்த பரிவர்த்தனைக்கு அக்ஷய் குமார் 26.1 லட்சம் ஸ்டாம்ப் டியூட்டியும், 30 ஆயிரம் ரூபாய் பதிவுக் கட்டணமும் செலுத்தியுள்ளார். இதேபோல் அக்ஷய் குமார் கடந்த ஜனவரியில் இதே சொசைட்டியில் இருந்த தனது இன்னொரு வீட்டையும் விற்பனை செய்திருக்கிறார். அந்த பிளாட்டையும் நவம்பர் 2017ல 2.38 கோடி ரூபாய்க்கு வாங்கினார். ஜனவரியில் அதை 4.25 கோடி ரூபாய்க்கு விற்றார். அக்ஷய்குமார் தனது படத்தின் லாபத்தில் பங்கு வாங்குகிறார். தொடர்ந்து இவர் நடித்த 15 படங்கள் தோல்வி அடைந்தன. இதனாலேயே அவசரமாக இந்த வீடுகளை அவர் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.