ARTICLE AD BOX
Sweet Heart Review: ரியோவின் ஸ்வீட் ஹார்ட் படம் எப்படி இருக்கு? செலிபிரிட்டிகள் சொல்வது என்ன?
சென்னை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஸ்வீட் ஹார்ட். இந்த படத்தில் ரியோ, கோபிகா ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தை ஸ்வீநித் சுகுமார் இயக்கியுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரியோவின் முந்தைய படமான ஜோ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் படம் பார்த்த பிரபலங்கள் படம் குறித்து தங்களது விமர்சனங்களைத் தெரிவித்துள்ளார்கள். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
படம் பார்த்த நடிகை ரம்பா பேசும்போது, " இந்த படம் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்தின் மூலம் காதலியை நினைவு கூறலாம், மனைவியை நினைவு கூறலாம் மற்றும் அம்மாவை நினைவு கூறலாம். குடும்பத்தை குடும்ப உறவுகளை மையமாக கொண்ட படமாக ஸ்வீட் ஹார்ட் உள்ளது. சில இடங்களில் நான் அழுதுவிட்டேன். சில இடங்களில் நன்றாக சிரித்தேன். இந்த படம் கிளைமாக்ஸில் சொல்லியுள்ள விஷயம் மனதிற்கு நெருக்கமானதாக இருந்தது. படம் அனைவருக்கும் பிடிக்கும்" என படம் குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

படம் குறித்து நடிகர் மணிகண்டன் கூறும்போது, இந்த படம் நவீன காலத்தில் இருக்கும் உறவுகள் குறித்து மிகவும் அழகாக பேசுகிறது. படத்தில் நடித்தவர்கள் தொடங்கி, படம் டெக்னிக்கலா மிகவும் ஸ்ட்ராங்கான படமாக உள்ளது.அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என நினைக்கிறேன். கண்டிப்பாக தியேட்டருக்கு வந்து இந்த படத்தை பாருங்கள் என பேசியுள்ளார்.

விஜே பார்வதி: அதேபோல் விஜே பார்வதி படம் குறித்து பேசும்போது, " படம் மிகவும் முக்கியமான விஷயத்தை பேசியுள்ளது. படம் அபார்ஷன் குறித்து பேசியுள்ளது. அதை மிகவும் சீரியஸாக சொல்லாமல் ஜாலியாக சொல்லியுள்ளார்கள். அபார்ஷன் என்றால் பெண்களுக்குத்தான் வலி, ஆனால் இந்த படத்தில் அதை ஆண்களுக்கும் கடத்தும் விதமாக உருவாக்கி வைத்துள்ளார்கள். எல்லோரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்" என விமர்சித்துள்ளார்.

மைம் கோபி: படம் குறித்து மைம் கோபி பேசுகையில், " ரியோ படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். படம் இளைஞர்களுக்கு நல்ல கருத்தைச் சொல்லும் படமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் இந்த காதல் எப்படி உள்ளது என்பதை சிறப்பாக காட்டியுள்ளார்கள். இயக்குநருக்கு பெரிய வாழ்த்துகள். நாம் அந்த கதைக்குள் இருப்பதைப் போல் இருந்தது. இந்த படம் சிறந்த படமாக இருக்கும்" என மைம் கோபி தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
சௌந்தர்யா : படம் குறித்து பிக் பாஸ் சௌந்தர்யா கூறும்போது, " படம் ஃபீல் குட் மூவியாக உள்ளது. ரியோவின் ஜோ படத்துடன் ஒப்பிடும்போது இந்த படத்தில் அதிக எமோஷன்ஸ் பார்க்கலாம். காதல் மற்றும் மற்ற உறவுகள் குறித்து இந்த படத்தில் அருமையாக காட்டியுள்ளார்கள். எல்லோருக்கும் இந்த படம் மிகவும் பிடிக்கும். யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் இந்த படம் சிறந்த படமாக வந்துள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார். பிரபலங்களின் விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.
