தொகுதி மறுவரையறை குறித்து பேசிய ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு!

5 hours ago
ARTICLE AD BOX
Published on: 
06 Mar 2025, 3:14 am

தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை திட்டம் தொடர்பாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்த்து வரும் சூழலில், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், மக்கள்தொகை மேலாண்மை மீது அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு
பீகார் | ஆட்சியை விமர்சித்த தேஜஸ்வி.. பதிலடி கொடுத்த நிதிஷ் குமார்! சட்டசபையில் அனல்பறந்த பேச்சு

தொகுதி மறுவரையறை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை, எனினும் அது நடக்க வேண்டிய நேரத்தில் நடத்தப்படுமெனவும் கூறினார். உலகளவில் நாம் போட்டியிட பல மொழிகளை கற்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பல மொழி மையங்கள் நிறுவப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Read Entire Article