தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: சென்னையில் இன்று கூடுகிறது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்!

4 hours ago
ARTICLE AD BOX
FairDelimitation

சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.

மத்திய அரசு 2026-ல் மக்களவைத் தொகுதிகளை மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால், மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆலோசனை கூட்டத்தில், இந்தக் கூட்டத்தில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர்  மற்றும்  முக்கியத் தலைவர்களும் தமிழ்நாடு வந்துள்ளனர்.

இதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே தென் பகுதி மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியதுடன், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் அடங்கிய குழுவுக்கு நேரடி அழைப்பும் விடுக்கப்பட்டது. மக்கள்தொகை மட்டுமல்லாமல், விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மக்கள்தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களில் பிரதிநிதித்துவம் குறைப்பு ஏற்படக் கூடாது என்பதை எடுத்துரைத்து இன்றைய ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தை முன்னிட்டு, சென்னை கிண்டி ஐடிசி சோழா ஹோட்டல் சுற்றுவட்டாரப் பகுதிகள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளன. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த க்யூ பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read Entire Article