ARTICLE AD BOX
முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்ததன் பேரில், இன்று (மார்ச் 22) சென்னையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டுக் நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி, போலி வாக்காளர் அடையாள அட்டை எண் விவகாரம் தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அக்கட்சி கருதுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பீகார், கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பிரச்சனை உருவாகலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் நம்புகிறது.
இந்த ஆண்டு இறுதியில், பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இது தவிர கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் வரும் 2026-ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
முன்னதாக, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.