தேர்தல் நெருங்குவதால் அளந்து பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் - செங்கோட்டையன்

13 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

தமிழக பட்ஜெட் நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை அதிமுக எல்எலஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் அதிமுக எல்எல்ஏவுமான செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருந்தார். இதையடுத்து நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செங்கோட்டையன் தங்களை சந்திக்காமல் தவிர்த்து வருகிறாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இதை செங்கோட்டையனிடம் தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசுகையில்,

என்னை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒன்றும் செய்யப் போவதில்லை. எந்த பாதை சரியாக இருக்கிறதோ அந்தப் பாதையில் நான் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது. என் பாதை தெளிவானது..வெற்றி முடிவானது. சில வேடிக்கை மனிதர்களைப் போல நான் விழுந்து விட மாட்டேன். தேர்தல் நெருங்குவதால் அளந்து பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நான் தலைவன் அல்ல தொண்டனாக கருத்தை கூறி வருகிறேன். தனியார் சுய நிதி கல்லூரிகளுக்கு அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர். அதனால் தான் உலகளவில் தலைசிறந்த பொறியாளர்கள் உள்ளனர். தலைமை எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு உதாரணமாக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அதிமுகவை வழிநடத்தினார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் சிறப்பான ஆட்சியைத் தந்தோம்" என்றவர் எடப்பாடி பழனிசாமி பெயரை கூறவில்லை.


Read Entire Article