ARTICLE AD BOX

சேலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டுள்ளார். அப்போது திமுக மட்டும் தான் தங்களுக்கு எதிரி என்றும் பிற கட்சிகள் தங்களுக்கு எதிரி கிடையாது என்றும் கூறினார். அதன் பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிக கட்சி இருக்கும் நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தின்படி தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி சீட் தர வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறி வருகிறார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி சீட் தருவதாக நாங்கள் எப்போது சொன்னோம் என்று கூறியுள்ளார். மேலும் செய்தியாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தேமுதிக கட்சிக்கு எம்.பி சீட் கொடுப்பது பற்றி கேள்வி எழுப்பிய நிலையில் உடனே அவர் கோபப்பட்டதோடு நாங்கள் எப்போது அப்படி சொன்னால் தேவையில்லாத கேள்விகளை கேட்காதீர்கள் நாங்கள் தேர்தல் வாக்குறுதியாக சொன்னவைகளை எடுத்துப் பாருங்கள் என்று கூறினார்.