ARTICLE AD BOX
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்களோட சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்...
Personality Test: ஜோதிடத்தின் படி, நமது கைகளில் காணப்படும் கோடுகளை ரேகைகள் என்பர். இந்த ரேகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். சொல்லப்போனால் இந்த ரேகைகள் நமது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அதுவும் நமது உள்ளங்கையில் உள்ள இதய ரேகை உணர்ச்சி, குணங்கள், இயல்பு, வாழ்க்கை மற்றும் தொழில் குறித்த பல விஷயங்களை தெரியப்படுத்தும். சுருக்கமாக கூற வேண்டுமானால், ஒருவரது உணர்ச்சிகள் மற்றும் உறவுகளை கையாளும் விதத்தை இந்த இதய ரேகை தெரியப்படுத்தும்.

இந்த இதய ரேகை நமது சுண்டு விரலுக்கு கீழே கிடைமட்டமாக நீளமாக இருக்கும். இந்த இதய ரேகையின் வடிவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். அதில் சிலருக்கு நேராக இருக்கலாம் அல்லது வளைந்து இருக்கலாம். இப்போது கீழே மூன்று விதமான இதய ரேகையின் வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு உள்ளங்கைகளை இணைக்கும் போது, உங்கள் இதய ரேகை எப்படி உள்ளது என்பதை அறிந்து, அது சுட்டிக்காட்டும் குணங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு கைகளில் உள்ள இதய ரேகை நேராக இருந்தால்...
உங்க இரண்டு கைகளிலும் உள்ள இதய ரேகை நேராக இருந்தால், நீங்கள் இணக்கமானவர் மற்றும் சமநிலையான இயல்பைக் கொண்டவர். உணர்ச்சி ரீதியாக நிலையானவராக இருப்பீர்கள். மிகவும் கனிவானவர் மற்றும் இரக்கமுள்ளவர். நம்பிக்கையானவர், சண்டை என்று வந்தால், சமாதானம் செய்பவராக இருப்பீர்கள். யாராலும் அசைக்க முடியாத அளவில் ஆதரவாக இருப்பீர்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் நிலையான நடைமுறை அணுகுமுறையைக் கொண்டிருப்பீர்கள். சவால்களை நேர்த்தியாக சமாளிப்பீர்கள். யாராலும் உங்களை எளிதில் திசைத்திருப்ப முடியாது. உறவுகளை சிறப்பாக பேணுவீர்கள். உணர்ச்சி ரீதியாக, அமைதியாக இருப்பீர்கள். அர்த்தமுள்ள உறவுகளைத் தேடுவீர்கள். நீங்கள் ஒரு விசுவாசமான மற்றும் நம்பகமான துணையாக இருப்பீர்கள்.
இடது கையின் இதய ரேகை வலது கையை விட உயரமாக இருந்தால்...
உங்கள் இடது கையின் இதய ரேகை வலது கையை விட உயரமாக இருப்பின், நீங்கள் வலுவான உள்ளுணர்வு, படைப்பாற்றல் கொண்டவர்களாக இருப்பீர்கள். சுதந்திரமாக செயல்பட விரும்புவீர்கள். தன்னம்பிக்கை அதிகம் நிறைந்தவராக இருப்பீர்கள். தனக்கென ஒரு பாதையை அமைத்து, அந்த வழியில் வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள். சுறுசுறுப்பான மற்றும் கவர்ச்சிகரமான ஆளுமையைக் கொண்டிருப்பீர்கள்.
சிலருடன் மட்டுமே வலுவான பிணைப்புகளை உருவாக்க முடியும். லட்சியவாதியாக இருப்பீர்கள். ரிஸ்க் எடுக்க பயப்படமாட்டீர்கள். எப்போதும் புதிய அனுபவங்களை தேடுவீர்கள். கதை சொல்வதில் வல்லவரா இருப்பீர்கள். கலைத்துறை உங்களுக்கு உகந்த துறையாக இருக்கும். வெளிப்படையாக பேசுவீர்கள். உங்கள் மீது அக்கறை கொண்டவர்களுக்கு விசுவாசமாக இருப்பீர்கள். சுதந்திரமாக இருக்க விரும்புவதால், மற்றவர்களை சார்ந்து இருக்க விரும்பமாட்டீர்கள்.
வலது கையின் இதய ரேகை இடது கையை விட உயரமாக இருந்தால்...
உங்கள் வலது கையின் இதய ரேகை இடது கையை விட உயரமாக இருப்பின், நீங்கள் யதார்த்தமானவர்கள். வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்து நடந்து கொள்வீர்கள். உணர்ச்சி ரீதியாக எந்த முடிவையும் எடுக்காமல், சூழ்நிலையை புரிந்து கொண்டு, முடிவுகளை எடுப்பீர்கள். மிகவும் நம்பிக்கையானவர் மற்றும் வலுவான பொறுப்புணர்வைக் கொண்டவர்கள். வாழ்க்கையில் தெளிவான இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள்.
நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மதிப்பவர். இதனால் ரிஸ்க் எடுக்க தயக்கம் கொள்வீர்கள். உணர்ச்சி ரீதியாக, நீங்கள் மிகவும் நிதானமாக இருப்பீர்கள். உங்கள் உணர்வுகளை ரகசியமாக வைத்திருக்க விரும்புவீர்கள். உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படையாக வெளிப்படுத்துவது உங்களுக்கு சவாலாக இருக்கலாம். அன்பானவர்களிடம் ஆழ்ந்த அக்கறையுடனும் விசுவாசத்துடனும் இருப்பீர்கள். நீங்கள் ங்கள் உறுதிமொழிகளை தீவிரமாக எடுத்துக்கொள்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)