ARTICLE AD BOX

தமிழக அரசானது விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலத்தடி நீர் பாசனத்தில் மின் மோட்டார், பம்பு செட் அமைப்பதற்கும் மானியம் வழங்கி வருகிறது. புதிய நான்கு நட்சத்திர தரத்தில் மின்மோட்டார், பம்பு செட்டை வாங்குவதற்கு 15,000 ரூபாய் வழங்கப்படும். இல்லையென்றால் மொத்த பம்பு செட்டுகளில் 50% மானியமாக வழங்கப்படும். மின்சார வாரியம் மூலமாக அனுமதிக்கப்பட்ட குதிரை திறன் இல்லை என்றால் அதற்கும் குறைவான குதிரை திறன் கொண்ட பம்பு செட்டுகளை வாங்கவும் மானியம் கிடைக்கும்.
மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட கிணறுகளுக்கும், பழைய பம்பு செட்டுகளுக்கும் புதிய நான்கு நட்சத்திரம் தரத்திலான மின்சார மோட்டார் பம்பு செட்டுகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. 5 ஏக்கர் வரை நிலம் கொண்ட விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் .தோட்டம் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை நீர் பாசனம் நிறுவிய விவசாயிகளுக்கும், நிறுவ விருப்பம் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே இந்த மானியம் பெற தகுதியுடையவர்கள். இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.