ARTICLE AD BOX

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதேபோல கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை கண்டித்து செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டத்திலிருந்து கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதை அரசு கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றம் சாட்டி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையில் வைத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் வருகிற ஆறாம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.